TVK-Vijay: விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்த கையோடு அடுத்தடுத்த நகர்வுகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய அவர் கட்சி பாடலையும் வெளியிட்டு இருந்தார். அது மீடியாவுக்கு சரியான தீனியாக இருந்தது.
கட்சி கொடி குறித்து சில விமர்சனங்கள் எழுந்தாலும் விஜயின் அடுத்த பிளான் பற்றிய பேச்சும் ஆர்வமும் தான் அதிகமாக இருந்தது. அந்த வகையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு எங்கு நடக்கப் போகிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது.
முன்னதாக திருச்சி, மதுரை என பல ஊர்களின் பெயர்கள் மீடியாவை சுற்றி வந்தது. ஆனால் தற்போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி. சாலை கிராமத்தில் தான் விஜய் தன் முதல் மாநாட்டை நடத்த இருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு
வரும் செப்டம்பர் 23ஆம் தேதி இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. அதற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்காக சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
மேலும் தென் பகுதியில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக 28 ஏக்கர் நிலப்பரப்பும் வட மாவட்டத்திலிருந்து வருபவர்களுக்காக 40 ஏக்கர் நிலப்பரப்பும் இருசக்கர வாகனங்களை நிறுத்த ஐந்து ஏக்கர் நிலப்பரப்பும் வாடகைக்கு பெற்றுள்ளனர்.
ஆக மொத்தம் 160 ஏக்கர் இந்த மாநாட்டிற்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. மாநாடு நடைபெறும் நாள் அன்று மக்களுக்கு தேவையான உணவு இதர வசதிகளும் செய்யப்பட இருக்கிறது. அதே போல் தீயணைப்பு வாகனம் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகளும் நிறுத்தப்பட இருக்கிறது.
இது தொடர்பான அனுமதி கடிதத்தை நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி அலுவலகங்களில் இன்று வழங்க விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த மாநாட்டிற்கு 1.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
பரபரப்பை ஏற்படுத்தும் விஜய்யின் முதல் கட்சி மாநாடு
- விஜய்க்காக இறங்கி வேலை பார்த்த VP
- விஜய்க்கு போன் போட்டு ஒரே போடாக போட்ட அஜித்
- தளபதி இடத்துக்கு தள்ளப்படும் சிவகார்த்திகேயன்