ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

அரசியல் களத்தை அலறவிடும் கட்டவுட்.. TVK முதல் மாநில மாநாடு, விஜய்யின் வியூகம் என்ன.?

TVK-Vijay: தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஒரே விஷயத்தை தான் உற்று நோக்கி வருகிறது. அரசியல் களமும் கூட இதை தான் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய் தன்னுடைய முதல் மாநில மாநாடை வரும் 27ஆம் தேதி நடத்த இருக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வரும் நிலையில் சில விஷயங்கள் விமர்சனமாகவும் சர்ச்சையாகவும் மாறி இருக்கிறது. அதாவது மாநாடு நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டவுட் அரசியல் களத்தை தற்போது மிரள வைத்திருக்கிறது.

அதன்படி காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு நடுவில் விஜயின் கட்டவுட் இடம்பெற்றுள்ளது. இதை தான் தற்போது ஆளும் கட்சியின் விசுவாசிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி சர்ச்சையாக மாற்றி வருகின்றனர்.

இதில் அண்ணா கட்டவுட் இடம் பெறவில்லையே என்ற கருத்து ஒரு பக்கம் எழுந்துள்ளது. அம்பேத்கர் பெரியார் நடுவில் விஜய்யின் படம் ஏன் என்றும் கேட்டு வருகின்றனர். இதில் காமராஜர் ஊழல் இல்லாத சிறப்பான ஆட்சியை அமைத்த பெருமைக்குரியவர்.

அதேபோல் பெரியார் கொள்கையை முன்வைத்து அரசியலில் ஈடுபடாத தலைவர்களே இருக்க முடியாது. அனைத்து தலைவர்களும் அவரை தான் பின்பற்றி தங்கள் பயணத்தை தொடங்கி இருக்கின்றனர்.

பரபரப்பை கிளப்பும் விஜய்யின் மாநில மாநாடு

மேலும் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர். அதன் காரணமாகவே தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் இவர்களின் கட்டவுட் இடம்பெற்று இருக்கிறது. இது சில விஷயங்களையும் நமக்கு உணர்த்துகிறது.

அதே சமயம் அண்ணா கட்டவுட் இல்லாததற்கு காரணமும் இருக்கிறது. அதாவது அவரை முன்னிலைப்படுத்தி தான் திராவிட கட்சிகள் இயங்கி வருகின்றன. விஜயின் அரசியல் அவர்களுக்கு எதிரானது என்பது அனைவருக்கும் தெரியும்.

அப்படி இருக்கும் பட்சத்தில் அண்ணாவின் கட்டவுட் இருப்பது சிறு முரண்பாடாக இருக்கும். அதேபோல் பல கட்சிகள் அம்பேத்கரை முன்னிறுத்தி அரசியல் செய்தது கிடையாது. இதற்கு முக்கிய காரணம் மற்ற சமூகத்தினரின் ஆதரவு கிடைக்காது என்பதுதான்.

ஆனால் விஜய் தன்னுடைய முதல் மாநாட்டிலேயே இப்படி ஒரு விஷயத்தை செய்திருப்பது மாபெரும் புரட்சிதான். இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டும் அதேபோல் அவர் மாநாட்டில் என்ன பேச போகிறார்? அவருடைய அரசியல் எப்படி இருக்கும்? கொள்கை என்ன? என்பது பற்றி தான் நாம் இப்போது யோசிக்க வேண்டும்.

அதை தவிர்த்து விட்டு சர்ச்சைகளை கிளப்புவது சரி கிடையாது என வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி தெரிவித்துள்ளார். இப்படியாக விஜய் நடத்தப் போகும் மாநாடு ஆரம்பத்திலேயே பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அதே சமயம் அவருடைய அரசியல் வியூகம் பற்றி தெரிந்து கொள்ளவும் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News