முக்கிய நிகழ்ச்சிக்கு சுபம் போடும் விஜய் டிவி.. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்!

Vijay TV: ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பேர் போன சேனல் தான் விஜய் டிவி. ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், கலக்கப்போவது யாரு, கிட்சன் சூப்பர் ஸ்டார், பிக் பாஸ், குக் வித் கோமாளி என ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தது இந்த சேனல்.

டிவிக்கு டிவி உட்கார்ந்து சீரியல் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை அப்படியே ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பக்கம் திருப்பியது. வார இறுதி நாட்களில் டிஆர்பி மழை தான் விஜய் சேனலில் கொட்டியது. விஜய் டிவி போலவே ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்திய மற்ற சேனல்கள் எல்லாம் புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாக தான் இருந்தது.

ஆனால் எல்லாமே சில காலம் தான் என்பது போல் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் அடி வாங்க ஆரம்பித்திருக்கிறது. அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்!

முதல் இரண்டு சீசன்களில் இந்த நிகழ்ச்சியை பட்டையை கிளப்பியது. அதிலும் இரண்டாவது சீசன் எல்லாம் பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டிவியில் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி சிலாகித்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள்.

நான்காவது சீசன் கொஞ்சம் மொக்கையாய் போக, ஐந்தாவது சீசன் மொத்தமாய் சேனலின் பெயரை டேமேஜ் செய்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த மீடியா மேசன் விஜய் சேனலில் இருந்து விலகிய பிறகு இந்த சேனல் தன்னிச்சையாக இந்த கான்செப்ட்டை உபயோகப்படுத்தி ஐந்தாவது சீசனை தொடங்கியது.

ஷெர்லின் ஜோயா, அக்ஷய் கமல், திவ்யா துரைசாமி, ஸ்ரீகாந்த் தேவா, பூஜா, இர்ஃபான், வசந்த் வசி, பிரியங்கா தேஷ்பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சுஜிதா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். புது புது கான்செப்ட் களை கொண்டு வந்து, எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து கூட இந்த நிகழ்ச்சி மக்களிடையே எடுபடவில்லை.

முதல் இரண்டு சீசன்களில் கொண்டாடப்பட்ட புகழின் காமெடி இந்த சீசனில் மைனஸ் ஆக மாறியது. கடைசி நான்கைந்து வாரங்களை குரேஷி தான் தன் தோளில் சுமந்து இருந்தார் என்று சொல்ல வேண்டும். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவுக்கு வந்திருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பிக்க இருப்பதால் இந்த சீசனை சட்டென முடிக்கிறார்கள். இப்படி ஒரு சீசனை ஆரம்பித்து, அதை இருந்த தடம் தெரியாமல் முடிவதற்கு, பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்பதுதான் பழைய குக் வித் கோமாளி ரசிகர்களின் எண்ணம்.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியால் தடுமாறும் விஜய் டிவி

- Advertisement -spot_img

Trending News