ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

டி.ஆர்.பி-யில் சன் டிவியை தூக்கி சாப்பிட்ட விஜய் டிவி சீரியல்.. ஆனாலும் அதிக இடத்தைப் பிடித்த சன் டிவி

தமிழில் தொலைக்காட்சிகளில் பல்வேறு முதன்மையான சேனல்கள் உள்ளது எனினும் எல்லாம் கலந்த கலவையாக இருப்பது சில சேனல்கள் மட்டுமே. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜி தமிழ், கலர்ஸ் டிவி என எளிதாக வரிசை படுத்தலாம்.

குறிப்பிட்ட இந்த சேனல்கள் தான் சீரியல், செய்திகள், திரைப்படம், ரியாலிட்டி ஷோ என எல்லாவற்றையும் கலந்து மக்களுக்கு காட்சியிட்டு வருகின்றன. மற்றவை எல்லாம் தனிப்பட்டு தனித்தனி விருப்பங்களுக்காக காட்சிப்படுத்தும் காமெடிக்கு தனி நியூஸ்-க்கு, தனி பாடல்களுக்கு, தனி திரைப்படங்களுக்கு, தனி என அவற்றின் செயர்பாடுகள் எல்லாம் கலந்த சேனல்களுக்கு நிகராக இருப்பதில்லை.

இந்த வகையில் சீரியல்களில் மக்களை கவர்ந்து இழுக்கும் சேனல்கள் என்றால் அது விஜய் டிவியும், சன் டிவியும் தான். நீண்ட காலம் வரை சீரியலின் ராணியாக இருந்து வந்த சன் டிவி, விஜய் டிவியின் சீரியல்களுக்கு பின் சில மாற்றங்களை கண்டுள்ளது. போட்டியாளர் இருந்தா் இன்னும் சுவாரஸ்யம் அதிகரிக்க தானே செய்யும் அதே போல் பல்வேறு சுவாரஸ்யங்கள் மிக்க சீரியல்களை களம் காண விட்டது சன் டிவி.

விஜய் டிவியும் அதற்கு நிகராக டஃப் காம்படிசன் கொடுத்து வந்தது. இந்நிலையில் கடந்த வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் வெளியாக உள்ளது. டி.ஆர்.பி என்பது பார்வையாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தது அனைத்து சேனல்களும் மிக கவனமாக பார்க்கும் அதன் அடிப்படையில் தான் அந்த ப்ரோகிராம்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்படும்.

கடந்த வாரத்திய ரிப்போர்ட் படி விஜய் டிவியின் “பாரதி கண்ணம்மா” முதலிடம் வகிக்கிறது. இரண்டாம் இடத்தில் சன் டிவியின் “ரோஜா” இருக்கிறது. என்னதான் முதலிடத்தை பிடிக்க தவறினாலும் டாப் டென்னில் அதிகமாய் இடம் பெற்றிருப்பது சன் டிவி தான். சன் டிவியின் 6 சீரியல்கள் உள்ள அதே பட்டியலில் விஜய் டிவியின் நான்கு சீரியல்களே இடம் பெற்றுள்ளன.

bharathikannamma-rupa

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி, ராஜா ராணி முறையே ஒன்று மூன்று ஐந்து மற்றும் எட்டாம் இடங்களை பெறுகின்றன பட்டியலில் அதிக இடங்களை பிடிக்கும் சன் டிவியின் ரோஜா, கண்ணான கண்ணே, வானத்தைப்போல, பூவே உனக்காக, சுந்தரி முறையே இரண்டு, நான்கு, ஆறு, ஏழு, ஒன்பது, பத்தாம் இடங்களை தங்கள் வசமாக்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News