Home Tamil Movie News டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க 5 சீரியலின் கதையை மாற்றும் விஜய் டிவி.. ரோகினிக்கு விழப்போகும் முதல்...

டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க 5 சீரியலின் கதையை மாற்றும் விஜய் டிவி.. ரோகினிக்கு விழப்போகும் முதல் அடி

vijay tv-logo
vijay tv-logo

Vijay tv Serial: விஜய் டிவி சீரியலை பொருத்தவரை சற்று வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் கதையை கொண்டு வந்து மக்களை கவர்ந்தது. ஆனால் சமீப காலமாக வழக்கமான சீரியலின் கதையாக மாறிவிட்டது என்று மக்கள் நொந்து போய் பார்ப்பதை குறைத்து கொண்டு வருகிறார்கள். இதனால் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வருகிறது.

இதனால் அதிரடியாக முடிவெடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப சில முக்கியமான சீரியல்களின் கதையாக விஜய் டிவி மாற்றுவதற்கு பிளான் பண்ணிவிட்டது. அந்த வகையில் அதிகமான புள்ளிகளை பெற்ற சிறகடிக்கும் ஆசை சீரியலின் கதையை மக்களுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக ரோகிணி கொஞ்சம் கொஞ்சமாக மாட்டப் போகும் விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

விறுவிறுப்பான கதைகளுடன் விட்ட இடத்தை பிடிக்கும் சீரியல்கள்

அதனால் ரோகிணி பற்றிய சில ரகசியங்கள் முத்துக்கு தெரிய வரப்போகிறது. அந்த வகையில் கல்யாணி எதற்காக ரோகிணியாக நடிக்கிறார். ஏழை குடும்பத்தில் பிறந்தாலும் ஏன் பணக்கார பெண் என்று பொய் சொன்னார். அம்மா இருந்தும் அம்மா இறந்து விட்டார் என்று பொய் சொல்ல காரணம் என்ன க்ரிஷ் யாரு எப்படி என்ற உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரப் போகிறது.

அந்த வகையில் கூடிய விரைவில் ரோகினி கையும் களவுமாக சிக்கி பார்ப்பவர்களை குதூகலப்படுத்தப் போகிறது. இதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்னதான் குடும்பங்களின் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை நகர்ந்தாலும் பார்ப்பவர்கள் எதிர்பார்ப்பு ராஜி மற்றும் கதிரின் காட்சிகள் அதிகமாக வேண்டும் என்ற ஆசைப்படுகிறார்கள்.

அதனால் இனி முக்கியமான கதையாக ராஜி மற்றும் கதிரின் ரொமான்ஸ் சண்டை காதல் காட்சிகள் என பின்னி பெடல் எடுக்க போகிறது. அடுத்ததாக சின்ன மருமகள் சீரியலில் தமிழ் என்னதான் தவறு பண்ணியிருந்தாலும் தற்போது மாமனார் குடும்பத்திற்கு ஒரு அவமானம் ஏற்பட போகிறது என்று தெரிந்ததும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு சேதுவின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் அந்த வீட்டிற்குள் மறுபடியும் சென்று சேதுவின் மனதில் இடம் பிடிக்கப் போகிறார். அடுத்ததாக மகாநதி சீரியலில் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஜய் மற்றும் காவிரியின் காதல் வெளிவரப் போகிறது. அந்த வகையில் இவர்கள் இருவரையும் ஒன்று சேர்க்கும் விதமாக காட்சிகள் அமையப் போகிறது.

அடுத்ததாக நீ நான் காதல் என்ற சீரியலில் ராகவ் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபிக்கும் விதமாக அபி போராடி வருகிறார். அந்த வகையில் கோர்ட்டில் ராகவ் நிரபராதி என்று வாதாடும் விதத்தில் அபி பேசுகிறார். அதனால் அபி மனதில் ராகவ் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை ராகவ் புரிந்து கொள்வார். அத்துடன் எல்லா தவறும் முரளி மேல்தான் இருக்கிறது என்ற உண்மையையும் தெரிய வரப்போகிறது.