வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

இந்த காளியோட ஆட்டத்த இனிதான் பார்க்க போறீங்க.. அபிஷேக்கை பழிகாடாக வைத்து எகிறும் விஜய் டிவியின் டிஆர்பி

ரியாலிட்டி நிகழ்ச்சி என்றாலே அனைத்து மக்களும் விரும்பி பார்ப்பர். அதனால் பல மொழிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புது புது விதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழில் ஸ்டார் விஜய் டிவியில் பிக் பாஸ் என்று அழைக்கப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளரும் பிற போட்டியாளர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை மக்களுக்கு காட்டி வருகின்றனர். இதில் அபிஷேக் என்கிற போட்டியாளர் அவ்வப்போது அண்ணியனாகவும் சில சமயங்களில் அம்பியாகவும் மாறி மாறி நடந்து கொள்கிறார்.

குரங்கு கையில் பூமாலை என்பதை போல இவர் கையில் பிக் பாஸ் சீசன்5 கொடுத்த பொறுப்பு. பிக் பாஸ் வீட்டில் சுவாரசியம் குறைந்த போட்டியாளர் யார் என்பதை தேர்வு செய்ய பிக் பாஸ் ஏற்படுத்திய குழுவில் அபிஷேக் ராஜா, அக்ஷரா, பவானி ரெட்டி ஆகியோர் இருந்தனர். அப்போது  சின்னப்பொண்ணு பெயரை நாமினேட் செய்தார் அபிஷேக்.

மேடையில் ஒரு மாதிரி நடித்து விட்டு யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் சின்னப்பெண்ணுவிடம் சென்று தன்னை மன்னித்து விடுமாறு கெஞ்சியுள்ளார். அதன்பின் சின்னப்பொண்ணுவின் ரூமை விட்டு வெளியே வந்து, சின்னப்பொண்ணு மிகவும் சில்லறைத் தனமாக நடந்து கொள்கிறார் என்று இழிவுபடுத்தி பேசுகிறார்.

abishek-raja-cinemapettai
abishek-raja-cinemapettai

இதற்கிடையில், இந்த காளியோட ஆட்டத்த இனிமேல்தான் பார்க்க போறீங்க என்று சவால்வேறு. ஆஹா, சரியான பலிகடா கிடைத்துவிட்டது, இவன வெச்சே இந்த மாசம் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றி விடலாம் என பயங்கரமாக திட்டத்தை போடும் பிக்பாஸ் குழு. மறுபக்கம், அதனால் அபிஷேக்கின் அட்ராசிட்டிஸ், அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

பிக் பாஸின் அமைதியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அபிஷேக், பிக் பாஸ் வீட்டில் பயங்கரமாக ஆட்டம் போட்டு வருகிறார். பிக்பாஸும் டிஆர்பி ரேட்டிங்காக அபிஷேகின் ஆட்டத்தை அமைதியாக பார்த்து வருகிறார். ஆனால் ரசிகர்களும், நெட்டிசன்களும், ஏதாவது பார்த்து செய்யுங்க என்றும் இவனின் நடவடிக்கை கொஞ்சம் ஓவரா போய்கிட்டு இருக்கு என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News