விஜய் டிவியின் 5 முக்கிய தொகுப்பாளர்கள் வாங்கும் சம்பளம்.. அடேங்கப்பா! பிரியங்காவை மிஞ்சிய அந்த தொகுப்பாளர்

Vijay TV: பிரியங்கா, மணிமேகலை பஞ்சாயத்து தொடங்கியதில் இருந்தே விஜய் டிவி தொகுப்பாளர்கள் பக்கம் மக்களின் கண்கள் திரும்பி இருக்கிறது. என்னதான் விஜய் டிவி இது பல விமர்சனங்கள் இருந்தாலும் விஜய் டிவி ப்ராடக்டுகள் திறமையானவர்கள் என்பதற்கு பலரும் சாட்சி.

சந்தானம், சிவகார்த்திகேயன், ரக்சன், டிடி போன்றவர்கள் வெள்ளித்திரையில் இதனால் தான் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். மணிமேகலையும், பிரியங்காவும் ஒரு ஷோவுக்காக அடித்துக் கொள்கிறார்கள் என்றால் அப்போ அதுல கலந்து கொள்வதற்கு அவங்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று எல்லோருக்கும் கேள்வி வரும். அந்த கேள்விக்கான பதில் தான் இந்த செய்தி. விஜய் டிவியின் முக்கியமான ஐந்து தொகுப்பாளர்களின் சம்பள விவரங்களை பற்றி பார்க்கலாம்.

5 முக்கிய தொகுப்பாளர்கள் வாங்கும் சம்பளம்

கோபிநாத்: விஜய் டிவி ஆரம்பித்த காலத்தில் இருந்தே உள்ளே இருப்பவர்தான் கோபிநாத். நீயா நானா என்ற நிகழ்ச்சி மூலம் தனக்கான அடையாளத்தை தமிழ் மக்களிடம் நிலையாக நிருவிக்கொண்டார். ஆரம்ப காலகட்டத்தில் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் இவருக்கான நிகழ்ச்சியாக வந்ததுதான் நீயா நானா. தற்போது இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க கோபிநாத் 5 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.

பிரியங்கா: டிடி, பாவனா, ரம்யா போன்ற பழைய பெண் தொகுப்பாளர்கள் யாரும் தற்போது விஜய் டிவியில் இல்லை. இப்போதைக்கு சீனியர் தொகுப்பாளர் என்றால் அது பிரியங்கா தான். பிரியங்கா விஜய் டிவியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். இவர் ஒரு எபிசோடுக்கு 2.5 லட்சம் சம்பளமாக வாங்குகிறார்.

மா கா பா ஆனந்த்: சிவகார்த்திகேயன் முழு நேர நடிகராக வெள்ளி திரையில் காலடி எடுத்து வைக்கும் நேரத்தில் அவருக்கு மாற்றாக உள்ளே வந்தவர் தான் மாகாபா ஆனந்த். இன்றுவரை தனக்கான ஒரு தனி அடையாளத்தை விஜய் டிவியில் உருவாக்கி வைத்திருக்கிறார். இவரால் விஜய் டிவியில் வெற்றி பெற்றவர்கள் பலர். தற்போதைக்கு மாகாபா ஆனந்த் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இரண்டு புள்ளி ஐந்து லட்சம் சம்பளமாக பெறுகிறார்.

ரக்சன்: அது இது எது நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு எபிசோடுகளில் அவ்வப்போது தலை காட்டிக் கொண்டிருந்தவர் தான் ரக்சன். அதன் பின்னர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் ஆஸ்தான தொகுப்பாளர் ஆனார். அதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கடந்த ஐந்து சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார். இவர் ஒரு எபிசோடிற்கு ஒரு லட்சம் சம்பளமாக பெறுகிறார்.

மணிமேகலை: மணிமேகலை என்னதான் சன் மியூசிக் சேனல் தொகுப்பாளினியாக இருந்திருந்தாலும் இவர் விஜய் டிவிக்கு கடைக்குட்டி தான். இதனால் மற்ற தொகுப்பாளர்களை விட கம்மியாகவே சம்பளம் பெறுகிறார். இவருக்கு ஒரு எபிசோடு தொகுத்து வழங்க 60,000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News