fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆல்யா இல்ல, டிஆர்பி-யில் துரத்தி விடப்பட்ட ராஜா ராணி 2.. முதல் 3 இடத்தை பிடித்த விஜய் டிவி சீரியல்கள்!

raja-rani-2-serial-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆல்யா இல்ல, டிஆர்பி-யில் துரத்தி விடப்பட்ட ராஜா ராணி 2.. முதல் 3 இடத்தை பிடித்த விஜய் டிவி சீரியல்கள்!

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர் என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். அந்தவகையில் இந்த வாரத்திற்கான விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

இதில் இல்லத்தரசிகள் படும்பாட்டை அழகாக சித்தரித்து காண்பிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் டாப் இடத்தை பிடித்து டிஆர்பியில் முன்னிலை வகிக்கிறது. இதைத்தொடர்ந்து சமையல் அம்மாவை ஆபிசராக காண்பித்து கதையின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

வழக்கமாக முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த சீரியலில் இந்த வாரம் முல்லைக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொண்டதால் அதை சுற்றியே கதை வருவதால் ரசிகர்களுக்கு போரடித்திருக்கும். அதனால்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் பின்னடைவை சந்தித்து இருக்கிறது.

இதைத்தொடர்ந்து 4-வது இடம் துவங்கப்பட்ட சில மாதங்களே ஆன தமிழும் சரஸ்வதியும் என்ற புத்தம் புது சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. ஐந்தாவது இடம் ராஜா ராணி2 சீரியல் பெற்றிருக்கிறது. இந்த சீரியலும் பொதுவாக டாப் 3 இடங்களை பெறும். ஆனால் கதாநாயகி ஆர்யாவை மாற்றிய பிறகு இந்த சீரியலும் டிஆர்பி பெரிதும் அடி வாங்குகிறது.

இருப்பினும் தற்போது சந்தியாவாக நடிக்கும் ரியா கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய நடிப்பை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். ஆறாவது இடம் மௌன ராகத்திற்கும் கிடைத்திருக்கிறது. ஏழாவது இடம் காதலித்து ஜோடிகளை பிரித்து, திருமணமாக இருந்த வேறொரு ஜோடிகளை மாற்றி மாற்றி திருமணம் செய்து வைத்து அவர்கள் அனுபவிக்கும் மன கஷ்டத்தை காண்பித்துக் கொண்டிருக்கும் புத்தம் புது சீரியல் ஆன ஈரமான ரோஜாவே2 சீரியல் பெற்றிருக்கிறது.

இதைத்தொடர்ந்து எட்டாமிடம் மதிய நேரங்களில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னைத்தொடும் என்ற சீரியலுக்கும், ஒன்பதாவது இடம் காற்றுக்கென்ன வேலி சீரியலுக்கும், 10-வது இடம் வேலைக்காரன் சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top