விரைவில் சூப்பர்ஹிட் சீரியல்களின் மகா சங்கமம்.. எகுற போகும் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு சின்னத்திரை ரசிகர்களிடம் எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. அந்த வகையில் விஜய் டிவியின் பிரபல இரண்டு சீரியல்களின் மகா சங்கமம் வரும் வாரத்தில் நிகழப்போகிறது. டிஆர்பி-யில் விஜய் டிவியில் முன்னிலை வகிக்கும் ப்ரைம் டைம் சீரியல்கள் ஆனா பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய சீரியல்களையும் இணைத்து ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக போகிறது.

இந்த இரண்டு சீரியல்களையும் ஏற்கனவே கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஒரு முறை மகா சங்கமம் ஆனது குறிப்பிடத்தக்கது. அப்போது சந்தியாவாக நடித்த ஆலியா மானசா மற்றும் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி இருவரும் சமையல் போட்டியில் இணைந்து நடித்து ஒரு கலக்குக் கலக்கினார்கள்.

அந்த எபிசோடுகள் அனைத்தும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் எகுறியது. அதேபோன்று தற்போது மீண்டும் இந்த இரண்டு சீரியல்களையும் இணைத்து டிஆர்பியை அதிகரிக்க விஜய்டிவி பக்கா பிளான் போட்டிருக்கிறது. பாரதிகண்ணம்மா சீரியல் கதாநாயகி ரோஷினி விலகிய பிறகு இந்த சீரியல் டல்லடிக்கும் தொடங்கிவிட்டது.

ஏனென்றால் ரோசினி தான் கண்ணம்மா கதாபாத்திரத்தில் தன்னுடைய முட்ட கண்ண உருட்டி உருட்டி நடித்து ரசிகர்களை கவர்ந்து வைத்திருந்தார். அதேபோன்றுதான் ராஜா ராணி2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்த ஆலியா மானஸா பிரசவத்திற்குப் பிறகு மறுபடியும் இந்த சீரியலில் நடிப்பார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த போது, அப்படி நடக்காமல் ரியா தற்போது சந்தியாவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

பொதுவாக சீரியலில் முக்கிய கதாபாத்திரம் மாற்றப்பட்டால் அதை ஏற்றுக் கொள்வதற்கு ரசிகர்களுக்கு காலதாமதம் ஏற்படும். அப்படிதான் இந்த இரண்டு சீரியல்களின் நிலைமை இருக்கிறது. எனவே ரசிகர்களுக்கு சுவாரசியத்தை அதிகப்படுத்துவதற்காக டல்லடிக்கும் இந்த இரண்டு சீரியல்களையும் இணைத்துள்ளனர்.

இந்த மகா சங்கம் படத்திற்குப் பிறகு பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய இரண்டு சீரியல்களும் இணைந்து முன்புபோலவே முன்னணி சீரியல்கள் ஆக மாற்ற இந்த மகா சங்கமத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன்பிறகு ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களின் லிஸ்டில் இந்த இரண்டு சீரியல்களும் மாறும் என விஜய் டிவி நம்புகிறது.