வந்த வேகத்திலேயே முடிவுக்கு வரப் போகும் விஜய் டிவி சீரியல்.. 100 எபிசோடில் ஏற்பட்ட பரிதாபம், என்டரியாகும் கண்மணி

Vijay Tv Serial: விஜய் டிவி ஒரு பக்கம் ரியாலிட்டி ஷோ மூலம் மக்களை கவர்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் குடும்பங்களை தன்வசம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு எக்கச்சக்கமான சீரியல்களையும் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது புதுசாக ஒரு சீரியல் வரப்போகிறது. ஆனால் அந்த ப்ரோமோவை வெளியிட்டதுமே கதை இப்படித்தான் இருக்கும் என்று மக்கள் தீர்மானம் பண்ணி விட்டார்கள்.

ஏற்கனவே இதே மாதிரி எத்தனையோ சீரியல்கள் வந்திருக்கிறது. ஆனாலும் ஹீரோ ஹீரோயின்களை மட்டும் மாற்றி விட்டு கதையே அப்படியே கொண்டு வந்திருப்பது விஜய் டிவிக்கு ஒன்னும் புதுசு இல்ல. அந்த வகையில் கண்மணி அன்புடன் என்ற சீரியல் வரப்போகிறது. கிராமத்து பெண்ணாக இருக்கும் கண்மணிக்கு வெண்ணிலா என்று மாடர்ன் பெண் தோழியாக இருக்கிறார்.

பழைய கதையை காப்பியடித்துக் கொண்டு வரும் புது சீரியல்

இவர்களுடைய நட்பை பார்க்கும் பொழுது ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருப்பது போல் தெரிகிறது. ஆனால் இவர்களுக்குள் சண்டை போட்டி பொறாமை வரும் அளவிற்கு அன்பு என்ற கேரக்டரில் நவீன் என்ட்ரி ஆகிறார். இவரைப் பார்த்ததும் கிராமத்து பெண் மயங்குகிறார். ஆனால் அன்பு, மாடர்ன் பெண்ணாக இருக்கும் வெண்ணிலா மீது ஆசைப்படுகிறார்.

அந்த வகையில் வெண்ணிலா மற்றும் கண்மணி நட்புக்கு இடையில் அன்பு நுழைந்து பிரச்சனையை உண்டாக்குவது தான் கதையாக இருக்கிறது. தற்போது இந்த நாடகம் வர இருப்பதால் விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் கம்மியான இடத்தை பிடித்திருக்கும் ஒரு சீரியலை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்து விட்டார்கள். அதுவும் அந்த சீரியல் வந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் தான் ஆகியிருக்கிறது.

அதற்குள் அந்த சீரியல் முடியும் நிலைமைக்கு பரிதாபமாகிவிட்டது. அதாவது வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியல் மூலம் அர்ஜுன் பார்வதி என்ற கேரக்டர் முக்கியமாக வைத்து இந்த குடும்பத்தை பழிவாங்கும் விதமாக வில்லி கேரக்டரில் பல்லவி நடித்து வருகிறார். ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்காததால் இதனுடைய கிளைமாக்ஸை கொண்டு வர முடிவு எடுத்து விட்டார்கள்.

அந்த வகையில் தன் தங்கையின் பிரியா வாழ்க்கையை காப்பாற்றும் விதமாக அர்ஜுன் மற்றும் பார்வதி சேர்ந்து பல்லவியின் திட்டத்தை சுக்குநூறாக உடைத்து விட்டார்கள். இதனை தொடர்ந்து அதில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வந்த அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக திருந்தி வருகிறார்கள். இன்னும் கொஞ்சம் சில நாட்களில் இந்த நாடகத்திற்கு மொத்தமாக பூசணிக்காய் உடைத்து முடித்து விடப் போகிறார்கள். அதன் பின் கண்மணி அன்புடன் சீரியல் என்டரி கொடுக்கும்.

Next Story

- Advertisement -