வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சாச்சனாவை காப்பாற்றி சண்டை கோழியை வீட்டை விட்டு அனுப்பிய விஜய் டிவி.. பிக் பாஸ் வைத்த டுவிஸ்ட்

Vijay TV Bigg Boss 8 Tamil Eviction: பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்து கிட்டத்தட்ட ஐந்து வாரங்கள் ஆன நிலையில் ரவிந்தர்,அர்னாவ், தர்ஷா எலிமினேட் ஆகி போயிருக்கிறார்கள். கடந்த வாரம் தீபாவளி முன்னிட்டு நோ நாமினேஷன் என்று விஜய் சேதுபதி உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு ட்ரீட் கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த வாரம் எந்த போட்டியாளர் வெளியே போவார்கள் என்று பல கேள்விகள் எழும்பியது.

அந்த வகையில் மக்களின் ஓட்டு கணிப்பின்படி மூன்று பேர் கம்மி ஓட்டுகளை வாங்கி இருக்கிறார்கள். அதில் சாச்சனா, ஆனந்தி, சுனிதா. ஆனால் இவர்களில் சாச்சனா மட்டும்தான் விளையாட்டை சரியாக விளையாடாமல் டம்மியாக உள்ளே இருக்கிறார்கள் என்று ஒரு பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. அதனால் எப்படியும் இந்த வாரம் சாச்சனா போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இங்குதான் பிக் பாஸ் ஒரு டுவிஸ்ட் வைத்திருக்கிறார். அதாவது சாச்சினாவிற்கு பதிலாக வீட்டுக்குள் சண்டைக்கோழியாக துள்ளிக் கொண்டு வரும் சுனிதா இந்த வாரம் எலிமினேட் ஆகி இருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சில போட்டியார்களை கம்பர் பண்ணி பார்க்கும் பொழுது சுனிதா வைக்கும் பாயிண்ட் அல்லது சொல்லும் விதம் கொஞ்சம் ஓரளவுக்கு மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இருக்கிறது.

ஆனால் அப்படிப்பட்ட சுனிதா தான் எலிமினேட் ஆகிருக்கிறார். அதிலும் சாச்சனாவை விட சுனிதா ஒன்னும் சும்மா இல்லை, அப்படி இருக்கும் பொழுது விஜய் டிவி சில தில்லாலங்கடி வேலையை பார்த்து சுனிதாவை வெளியே அனுப்பி விட்டது. சுனிதாவின் பாயிண்டு கரெக்ட் ஆகவும், தெளிவாகவும் இருப்பதால்தான் விஜய் சேதுபதி வரும்பொழுது முக்கியமாக சுனிதாவிடம் கருத்து கேட்பார்.

அந்த அளவிற்கு இருந்த சுனிதாவிற்கு இந்த நிலைமையா என்று பார்க்கும் பொழுது கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. மேலும் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரப்போற வாரத்தில் நடுவில் ஒரு போட்டியாளரை வெளியே அனுப்பலாம் என்று முடிவு எடுத்து வைத்திருக்கிறார்கள். அதன்படி எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்த வார நடுவில் அன்சிதாவை வெளியே அனுப்ப வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

Trending News