பிக்பாஸில் இந்த வாட்டியாவது புரியிற மாதிரி பேசுங்க.. கமலுக்கு கோரிக்கை வைத்த விஜய் டிவி

தற்போது தமிழ் டிவி சேனல்களில் நல்ல நல்ல ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் முதலிடத்தை பிடித்துள்ளது விஜய் டிவி. விஜய் டிவி தயாரிக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் காமெடிகளே பிரதானமாக இருந்து வருகிறது.

அதுவே அந்தந்த நிகழ்ச்சிகளின் வெற்றிக்கும் காரணமாக அமைந்துள்ளது. இவ்வளவு ஏன் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களும் பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன்3 விரைவில் தொடங்கப்படவுள்ளதை தொடர்ந்து அடுத்ததாக விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. ஒரே நேரத்தில் டிஆர்பியை தங்கள் பக்கம் வைக்க விஜய் டிவி இந்த முடிவை எடுத்துள்ளதாம்.

இதற்காக தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆட்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் அந்த நான்கு சீசன்களில் உலக நாயகன் கமலஹாசனின் தொகுத்து வழங்கினார்.

தற்போது ஐந்தாவது முறையாக பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் கமலஹாசன். இதுவரை கமலஹாசனின் தொகுத்து வழங்கும் முறையில் தலையிடாத விஜய் டிவி இந்த முறை கமலஹாசனுக்கு சில டிப்ஸ் கொடுத்துள்ளதாம்.

வழக்கம்போல் இல்லாமல் இந்த முறை ரசிகர்கள் ரசிக்கும்படி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூறிவிட்டார்களாம். அதற்கு வேறு ஒன்றும் செய்ய வேண்டாம், தூய தமிழில் பேசி மக்களை குழப்பாமல் சாதாரண தமிழில் பேசி எதார்த்தமாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்லுங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர் விஜய் டிவி வட்டாரங்கள்.

kamal-biggboss-cinemapettai
kamal-biggboss-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்