Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல நடிகையை அடித்து துரத்திய விஜய் டிவி.. சோகத்தில் பிரபல சீரியல் ரசிகர்கள்
விஜய் டிவியில் எப்போது என்ன நடக்கும் என்று ரசிகர்களால் கணிக்க முடியாது என்பது சமீபத்தில் நிரூபணமாகியுள்ளது. சமீபத்தில் விஜய் டிவிக்கு நல்ல டிஆர்பி ரேட்டிங் பெற்று தரும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று.
இதில் மிகவும் பிரபலமான ஜோடியாக வலம் வருபவர்கள் முல்லை மற்றும் கதிர். முல்லை என்ற கதாபாத்திரத்தில் பிரபல சின்னத்திரை விஜே சித்ரா நடித்து வருகிறார்.
சமீபத்தில்தான் இவர் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் பாண்டியன் ஸ்டோர் சீரியலை முல்லை கதாபாத்திரத்திற்காக மட்டுமே பார்க்கும் ரசிகர்களும் அதிகம்.
இந்நிலையில் விஜய் டிவியில் புதிய ரியாலிட்டி ஷோ ஒன்று அறிமுகமாக உள்ளது. அதற்கு ஸ்டார் ஜோடி எனவும் பெயரிட்டு உள்ளனர். முழுக்க முழுக்க நடனம் சார்ந்த இந்த நிகழ்ச்சி விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
இதற்காக விஜய் டிவியில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகள் ஒன்றாக ஜோடியாக சேர்ந்து நடன பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல்தான் விஜே சித்ரா சமீபகாலமாக நடன பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
ஆனால் திடீரென விஜய் டிவி VJ சித்ராவை அந்த நிகழ்ச்சியில் இருந்து தூக்கி விட்டதாக அறிவித்துள்ளனர். இதனை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு புலம்பியுள்ளார் சித்ரா. காரணம் சக நடிகை ஷிவானி நாராயணனுடன் சண்டை போட்டதுதான் என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

vj-chitra
சித்ரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் அதிக வாய்ப்பிருக்கிறது என ஒரு பக்கம் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில் எது உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
