சினிமா பிரபலங்களுக்கு இணையாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறது, அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் இருந்து பல நடிகர்கள் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்கள்.

ramar
ramar

அதுவும் விஜய் டிவியில் இருந்து பல பிரபலங்கள் சினிமாவில் கால் தடம் பதித்து விட்டார்கள் நடிகர் சிவகார்த்திகேயனிலிருந்து, ப்ரியா பவானி சங்கர், டிடி சினிமாவில் நுழைந்து விட்டார்கள், தற்போது மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம் சினிமாவில் கால்பதிக்க இருக்கிறார்.

அது வேற யாரும் இல்லை நம்ம ராமர் தான், ஆத்தாடி என்ன உடம்பு இந்தப்பாடலை மீண்டும் ரசிகர்களிடம் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்தவர் ராமர் இது அனைவரும் அறிந்ததே, சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ பரவியது அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் ராமரின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது, அதுவும் இல்லாமல் அந்த புகைப்படத்தில் பெண் விலை வெறும் 999 மட்டுமே சரக்கு மற்றும் சேவை வரி உட்பட, என அந்த புகைப்படத்தில் டைட்டில் இருக்கிறது, இப்படி ஒரு சர்ச்சையான டைட்டில் உள்ள படத்தில் ராமர் நடிக்கிறார் என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here