சிம்புன்னா கிள்ளு கீரை, ப்ரியங்கா என்ன இரத்தின கம்பளமா?. விஜய் டிவி செய்த மட்டமான வேலை

CWC 5: விஜய் டிவி டிஆர்பிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய சேனல் என்பது எல்லோருக்குமே தெரியும். எதார்த்தமாக போய்க்கொண்டிருந்த மற்ற சேனல்களின் நிகழ்ச்சிகளை கூட விஜய் டிவியை பார்த்து டிஆர்பிக்காக நிறைய விஷயங்கள் செய்ய ஆரம்பித்தார்கள்.

ஜோடி நம்பர் ஒன் என்னும் நிகழ்ச்சியில் சிம்பு மற்றும் பிரித்விராஜ் இருவருக்கும் இடையே நடந்த சண்டைதான் முதன் முதலில் விஜய் டிவி போட்ட பிளான். அந்த எபிசோடுக்கு டிஆர்பி எகிற ஆரம்பித்தது. அதிலிருந்து விஜய் டிவி நிகழ்ச்சிக்கு ஒரு சண்டை என பஞ்சாயத்து பண்ண ஆரம்பித்தது.

சில நேரங்களில் போட்டியாளர்களுக்கும் லவ் ட்ராக் ஆரம்பித்துவிட்டு அதன் மூலம் டிஆர்பி தேடியது. வராத சண்டையை கூட இழுத்து விட்டு அதன் மூலம் டிஆர்பி தேடுவதில் ரொம்பவும் திறமையானது.

அப்படி இருக்கும் பட்சத்தில் மணிமேகலை மற்றும் பிரியங்காவின் பிரச்சனையை வெளிச்சத்திற்கு கொண்டு வராதது ஏன் என்ற சந்தேகம் இப்போது எல்லோருக்குமே வருகிறது.

விஜய் டிவி செய்த மட்டமான வேலை

தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோவாக இருந்த சிம்பு சண்டை போடுவதையே எடிட் செய்யாமல் போட்ட சேனல் இது. அப்படி இருக்கும்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு முறை கூடவா பிரியங்கா மற்றும் மணிமேகலை தங்களுடைய மனஸ்தாபத்தை வெளிப்படுத்தி இருக்க மாட்டார்கள்.

கடந்த வாரத்தின் சனிக்கிழமை எபிசோடில் என்னமோ சரியில்லை என்பது பார்ப்பதற்கே நன்றாக தெரிந்தது. கிட்டத்தட்ட அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தை எடிட் செய்து விட்டு தான் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பி இருக்கிறார்கள்.

கண்டிப்பாக மணிமேகலை தன் தரப்பு நியாயத்தை முன் வைத்திருப்பார். அதற்கு பிரியங்கா எந்த மாதிரியான பதிலை கொடுத்திருப்பார் என தெரியவில்லை. எல்லா விஷயத்தையும் வெளிச்சம் போட்டு காட்டி டிஆர்பி தேடும் விஜய் டிவி இந்த விஷயத்தில் பிரியங்காவை காப்பாற்றுவதிலேயே கவனம் செலுத்தி இருக்கிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News