விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட புகழ்.. குக் வித் கோமாளியால் ஏற்பட்ட சங்கடம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி டிஆர்பியில் அதிக ரேட்டிங் பெரும். அதாவது இந்நிகழ்ச்சியில் சமையல் போட்டியாளர்கள் உடன் கோமாளிகளும் சேர்ந்து லூட்டி அடிக்கின்றனர். ஆனால் கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசன் மந்தமாக தான் சென்று கொண்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் சிவாங்கி மற்றும் புகழ். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பிரபலமடைந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவருக்கு பேரை வாங்கி தந்தது. அதுமட்டுமின்றி வெள்ளித்திரையில் பட வாய்ப்புகளும் அவரை வந்து சேர்ந்தது.

Also Read : பிரதமரை பதவி விலகச் சொன்ன விஜய் டிவி பிரபலம்.. 288-க்கும் மேல் உயிரிழப்பால் கொந்தளித்த சம்பவம்

அதன்படி ஒரு சில படங்களிலும் புகழ் நடித்திருந்தார். இப்போது சீசன் 4 நிகழ்ச்சியில் புகழ் ஒவ்வொரு வாரமும் தவறாமல் கலந்து கொள்கிறார். அந்த வகையில் படங்களில் உள்ள கெட்டப் போட்டு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் விஜய்யின் கில்லி பட கெட்டப்பை புகழ் போட்டிருந்தார்.

எப்போதுமே புகழை குக் வித் கோமாளி செட்டில் உள்ளவர்கள் கேலி, கிண்டல் செய்வது வழக்கமாக உள்ளது. செஃப் வெங்கடேஷ் பட்டிடம் செல்லமாக புகழ் வம்பு இழுப்பார். அப்படி கடந்த வாரமும் வெங்கடேஷ் பட் புகழை அடித்து துவம்சம் செய்தார். மற்ற போட்டியாளர்களும் புகழை வச்சி செய்திருந்தனர்.

Also Read : மீண்டும் விஜய் டிவியில் தஞ்சமடைந்த டிடி.. பிரம்மாண்டமாக தொடங்க உள்ள சீசன் 3

ஆனால் இதுவரை எந்த கெட்டப் போட்டும் மன்னிப்பு கேட்காத புகழ் தளபதி விஜய்யின் கில்லி பட கெட்டப் போட்டவுடன் மன்னிப்பு கேட்டு உள்ளார். ஏனென்றால் விஜய் கெட்டப்பில் இருக்கும்போது அடுத்தவர்கள் அடித்தார்கள் என்றால் ரசிகர்கள் தப்பாக எடுத்துக் கொள்வார்கள் என்பதால் இவ்வாறு செய்துள்ளார்.

மேலும் விஜய் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து விடுவாராம். ஆகையால் புகழ் முன்கூட்டியே அவரது கெட்டப் போட்டதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் இன்னும் சில வாரங்களில் குக் வித் கோமாளி சீசன் 4 பைனலை நெருங்க உள்ளது.

ghilli-getup-pugazh
ghilli-getup-pugazh

Also Read : சீக்ரெட் ஆக திருமணத்தை முடித்த விஜய் டிவி தீனா.. மனைவியுடன் வைரலாகும் புகைப்படம்