சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஆண்டவர் இல்லாத பிக்பாஸ் 8, துண்டு போட்ட பிரியங்கா.. விஜய் டிவியின் பிளானுக்கு பாலூத்திய மணிமேகலை

Priyanka-Biggboss 8: இந்தப் பக்கம் பார்த்தா பிரியங்கா. அந்த பக்கம் பார்த்தா மணிமேகலை. சரி பின்னால திரும்பி பார்த்தா குக் வித் கோமாளி. இதுதான் கடந்த சில நாட்களாக சோசியல் மீடியாவின் கன்டென்ட் ஆக உள்ளது.

மணிமேகலை ஒரு வீடியோவை போட்டாலும் போட்டார். அது பல அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சுயமரியாதை என்ற ஒரே வார்த்தை இப்போது மணிமேகலைக்கு லட்சக்கணக்கில் ஆதரவை கொண்டு வந்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் பிரியங்காவை தான் அனைவரும் குற்றம் சொல்லி வருகின்றனர். ஒரு விதத்தில் அவருடைய அணுகுமுறையும் அதிகமான பேச்சும் பிரச்சனை இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். தற்போது இந்த விவகாரத்தில் விஜய் டிவியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க பிரியங்கா குறித்த மற்றொரு தகவல் தீயாக பரவி வருகிறது. அதாவது விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளையும் தன் வசப்படுத்தும் திறமை அவருக்கு உண்டு. அதனாலயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் வெளியேறியதும் அந்த இடத்திற்கு இவரை கொண்டுவர விஜய் டிவி முயற்சித்துள்ளது.

பிரியங்காவின் செல்வாக்கு

என்னது ஆண்டவர் இருந்த இடத்தில் பிரியங்காவா என நீங்கள் அதிர்ச்சியாகலாம். ஆனால் விஜய் டிவியின் திட்டமே இதுதான். எப்படியோ கடைசி நேரத்தில் விஜய் சேதுபதி கைக்கு நிகழ்ச்சி சென்று விட்டது. ஏனென்றால் பிரியங்கா அந்த இடத்திற்கு வரக்கூடாது என ஏகப்பட்ட அழுத்தங்கள் விஜய் டிவிக்கு வந்திருக்கிறது.

அதனாலேயே அந்த பிளான் மாறியது. அதேபோல் குக் வித் கோமாளி இந்த சீசன் டைட்டில் வின்னரும் பிரியங்கா தான். அதையும் விஜய் டிவி ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிட்டது. அதன் பிறகு தான் போட்டியாளர்களை அவர்கள் தேர்ந்தெடுத்த கதை எல்லாம் நடந்திருக்கிறது.

இதை நெட்டிசன்கள் தற்போது வன்மையாக எதிர்க்கின்றனர். மணிமேகலை இப்போது கிளப்பிய பிரச்சனையை சில வாரங்களுக்கு முன் கிளப்பி இருந்தால் கதையே மாறி இருக்கும். ஆனால் அனைத்தும் இப்போது கைமீறிவிட்டது.

இருந்தாலும் இத்தனை வருடங்களாக வெற்றிகரமாக இருந்த இந்த நிகழ்ச்சிக்கு அவர் பாலூத்தி விட்டார். இதனால் அடுத்த சீசன் தொடங்குமா என்ற ஒரு கேள்வியும் இருக்கிறது. இதற்கும் சேனல் தரப்பு ஏதாவது பிளான் வைத்திருப்பார்கள். காத்திருந்து பார்ப்போம்.

ஆண்டவர் இடத்தில் பிரியங்காவா.?

- Advertisement -

Trending News