Connect with us

Cinemapettai

ஹாலிவுட்டை மிஞ்சிய விஜய் டிவி! இதுலயும் அதே பிரச்சனையா? என பங்கம் செய்யும் நெட்டிசன்கள்!

vijay-tv

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹாலிவுட்டை மிஞ்சிய விஜய் டிவி! இதுலயும் அதே பிரச்சனையா? என பங்கம் செய்யும் நெட்டிசன்கள்!

ஒவ்வொரு சேனலும் தங்களது நிறுவனத்தின் டிஆர்பியை நம்பர் ஒன் ஆக்குவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு சேனலும் புதுப்புது ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள்,  நிகழ்ச்சிகள் என பலவற்றை தயாரித்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமில்லாமல், ஒரு குறிப்பிட்ட சேனலில் வெற்றியடைந்த சீரியலின் இரண்டாம், மூன்றாம் பாகங்களை எடுத்து ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

அந்த வகையில்தான் ஏற்கனவே விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டாம் மூன்றாம் பாகங்கள் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

அதேபோல், ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகம் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ‘வேலம்மாள்’ என்ற புதிய பயோபிக் தொடர் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மௌனராகம்’ சீரியலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் குழந்தை நடிகையான கிருத்திகா. இந்த சீரியல் 850 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக  முடிவடைந்தது. இதன் இரண்டாம் பாகம்  தயாராகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

தற்போது மௌனராகம் சீரியல் நடித்திருந்த பேபி கிருத்திகா ‘வேலம்மாள்’ என்ற புதிய தொடரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தத் தொடரின் ப்ரோமோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல், ப்ரோமோ பார்க்கும்போது இந்த சீரியலும் அப்பா மகள் சென்டிமென்ட் கதை போல் தான் தெரிகிறது. எனவே, இதைப் பார்த்த பலரும் ‘இதுலயும் அதே கதைதானா?’ என்று விஜய் டிவியை பங்கம் செய்து வருகின்றனர்.

வேலம்மாள் ப்ரோமோ வீடியோ:-

 

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top