Connect with us
Cinemapettai

Cinemapettai

முத்தழகுக்கு மாப்பிள்ளை பார்க்கும் அம்மா.. விஷப் பாம்பாக மாறிய சித்தி

muthazhagu

Videos | வீடியோக்கள்

முத்தழகுக்கு மாப்பிள்ளை பார்க்கும் அம்மா.. விஷப் பாம்பாக மாறிய சித்தி

விஜய் டிவியில் முத்தழகு எனும் புத்தம் புதிய சீரியல் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கிராமத்து விவசாய பின்னணியை கொண்ட கதைக்களமாக இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதில் முத்தழகு என்னும் கதாபாத்திரத்தில் ஷோபனா நடித்து வருகிறார்.

இந்த சீரியலின் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. முத்தழகின் சித்தியிடம் ஒரு பெண்மணி முத்தழகிக்கு மாப்பிள்ளை பார்த்து வைத்துள்ளதாக கூறுகிறார். இதனைக் கேட்டு அதிர்ந்த அவரின் சித்தி மாப்பிள்ளை வீட்டுக்கு போன் செய்து பேசுகிறார்.

முத்தழகு குடும்பத்திற்கு ஏற்ற பெண் இல்லை என்றும், அவரால் ஒரு குழந்தையை பெற்று தர முடியாது என்றும் சொல்கிறார். இதைக் கேட்ட மாப்பிள்ளையின் தாயார் அதிர்ந்து நிற்பது போன்று ப்ரோமோ முடிகிறது.

முத்தழகுவிடம் பாசம் காட்டுவது போல் நடிக்கும் சித்தி, எங்கே அவள் திருமணம் ஆகி சென்று விட்டால் குடும்பத்தில் உழைப்பதற்கு ஆள் கிடையாது என்ற எண்ணத்தில் தான் இப்படி கொடூரமான குணத்தை காட்டி வருகிறார்.

சினிமாவில் தொடங்கி சின்னத்திரை வரை வழக்கமாக நடக்கும் சித்தி கொடுமை தான் இதிலும் நடக்கிறது. அதிலும் விஜய் டிவியில் வரும் பாதி சீரியல்களில் இரண்டு பொண்டாட்டிகள் கதை பற்றி தான் இருக்கிறது.

பணக்கார ஹீரோ, ஏழை ஹீரோயின் இவர்களுக்குள் நடக்கும் காதல், திருமணம் ஆன ஹீரோ பின்னாடி அலையும் ஒரு எக்ஸ்ட்ரா வில்லி இதே கதை தான் எல்லா சீரியலிலும் வருகிறது. இந்த ட்ராக்கை இயக்குனர்கள் எப்பதான் மாற்றுவார்களோ தெரியல. அடுத்த பாரதி கண்ணம்மா வந்தாச்சு.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top