Zee Tamil Serial: மக்களின் பொழுதுபோக்காக சின்னத்திரை மூலம் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் முதலிடத்தில் சன் டிவி சீரியல்கள் தான் மக்கள் மனதை கொள்ளையடித்திருக்கிறது. இருந்தாலும் விடாமுயற்சியுடன் விஜய் டிவி தொடர்ந்து புதுப்புது சீரியல்களை கொண்டு வந்து மக்களை மகிழ்வித்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்கும் ஆசை சீரியல் மட்டும் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தில் ஒரு இடத்தை பிடித்திருக்கிறது.
டிஆர்பி ரேட்டிங்கில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறும் ஜீ தமிழ்
மற்ற சீரியல்கள் எல்லாம் கதைகள் நல்லாயிருந்தாலும், அதில் அரைச்ச மாவே அரைத்துக் கொண்டு இழுவையாக இழுத்தடிப்பதால் மக்கள் ரொம்பவே போர் அடிக்குது என்று அந்த நாடகத்தை வெறுத்துப் போய் விட்டார்கள். இதற்கு இடையில் கிடைத்த கேப்பில் புகுந்து ஸ்கோர் பண்ணி விட வேண்டும் என்று சைடு கேப்பில் நுழைந்த ஜீ தமிழ் சீரியல்கள் கொஞ்சம் கொஞ்சமாக டிஆர்பி ரேட்டிங்கில் இடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறது.
அந்த வகையில் சண்முகத்தின் நடிப்பு பிரமாதம் என்று சொல்லும் அளவிற்கு டபுள் கேரக்டரை உள்ளே கொண்டு வந்து யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதையை மிரட்டி விட்டது அண்ணா சீரியல். இதில் சண்முகத்துடன் பரணி சேர்ந்து சவுந்தர பாண்டியனுக்கு வைத்த ஆப்பு பார்ப்பதற்கே கண்கொள்ளக் காட்சியாக அமைந்து மக்களின் பேவரட் சீரியலாக இடம் பிடித்திருக்கிறது. அதனால் டிஆர்பி ரேட்டிங்கில் 5.17 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது.
இதனை அடுத்து கார்த்திக்கு ரொமான்ஸ் வருமா, தீபா மீது காதல் வந்துவிடுமா என்று ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக தீபாவை கூப்பிட்டு தன் காதலை சொல்லி தீபா ஆசைப்பட்ட மாதிரி கல்யாணத்தையும் செய்து கொண்டு ரம்யாக்கு சரியான பாடத்தை கற்பிக்கும் வகையில் கார்த்திக் தரமான சம்பவத்தை செய்து விட்டார். அந்த வகையில் கார்த்திகை தீபம் இந்த வாரம் 4.73 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.
அடுத்ததாக தன் அம்மாவுக்கு அடுத்து தன் மீது அக்கறையும் பாசத்தையும் காட்டும் வீரா தன்னுடைய மனைவியாக வரவேண்டும் என்ற ஆசைப்படும் மாறன் அப்பாக்கு கொடுத்த வாக்கையும் மீறி யாரும் எதிர்பார்க்காத விதமாக வீரா கழுத்தில் தாலி கெட்டி விட்டார்.
ஆனாலும் மாறனுடன் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக கண்மணி, வீராவை தன்னுடன் வீட்டிற்கு கூட்டிட்டு போய் விட்டார். வீராவை தேடி வந்த மாறனை போலீஸ் வந்து கைது பண்ணிட்டு போகிறார்கள். இதில் மாறனை காப்பாற்றும் விதமாக வீரா எடுக்கப் போகும் முடிவு தான் அடுத்த கட்ட விறுவிறுப்பாக கதை இருக்கும். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 4.60 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
இதனை அடுத்து சீனு சொந்தமாக சம்பாதித்து அனைவரது முன்னாடியும் கவுரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மாயா, சீனு அப்பா வியாபாரம் செய்து தோற்றுப்போன துணிக்கடையை சீனுவை எடுத்து நடத்த சொல்லி ஐடியா கொடுத்து பணம் உதவியும் செய்கிறார். ஆனாலும் இவர்கள் ஒன்று சேர கூடாது என்று சீனுவின் அம்மா யோசிக்கிறார். இதற்கிடையில் ரகுராம் எடுக்கப் போகும் முடிவு மாயாவுக்கு சாதகமாக இருக்குமா என்பது கேள்விக்குறியாக போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 4.39 புள்ளிகளை பெற்று சந்தியாராகம் சீரியல் நான்காவது இடத்தில் இருக்கிறது.
அடுத்ததாக சுடர் எழில் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக எழிலின் மூத்த மனைவி சுடர் வெளிநாட்டுக்கு போக விடாமல் தடுப்பதற்காக சுடர்க்கு விபத்து ஏற்படுத்தி விடுகிறார். அந்த வகையில் எழிலை காப்பாற்றும் விதமாக சுடர் விபத்துக்கு ஆளாகி விடுகிறார். இதனால் சுடரை பக்கத்திலிருந்து கவனிக்கும் பொறுப்பில் எழில் இருப்பதால் இவர்களுடைய பந்தம் நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 3.32 புள்ளிகளை பெற்று நினைத்தேன் வந்தாய் சீரியல் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் தற்போது புதிதாக நுழைந்திருக்கும் நெஞ்சத்தை கிள்ளாதே, நினைத்தாலே இனிக்கும் சீரியல்க்கும் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
- ஜீ தமிழ் சீரியலில் நடிக்க எதிர்நீச்சல் பிரபலத்திற்கு கிடைத்த வாய்ப்பு
- என்டரி கொடுக்கப் போகும் சன் டிவி ஹீரோ
- ஆட்ட நாயகனாக ஜீ தமிழில் ஜொலிக்கும் விஜய் டிவி ஹீரோ