புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

விஜய் சேதுபதி நல்லுள்ளத்துக்கு வந்த சங்கடம்.. ஆரம்பிக்கும் முன்னே அழிச்சாட்டியம் செய்த விஜய் டிவி

விஜய் சேதுபதி பிக் பாஸ் எட்டாவது சீசனை தொகுத்து வழங்க உள்ளார். இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்து வருகின்றது விஜய் டிவி. நிகழ்ச்சி நடைபெறும் 100 நாட்களுக்கும் விஜய் டிவி கண்ட்ரோலில் தான் விஜய் சேதுபதி இருக்க வேண்டுமாம்.

உச்ச நடிகர் கமலுக்கு பதிலாக இந்த முறை எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். ஆனால் இதற்கு பல போட்டிகள் நிலவிய போதிலும் ஒரு பெரும் தொகையை விஜய் டிவி லாக் செய்ததால் விஜய் சேதுபதி இதற்கு சம்மதித்து கொண்டார். கிட்டத்தட்ட 100 கோடிகளுக்கு மேல் டீல் பேசப்பட்டுள்ளது.

சிம்பு, பார்த்திபன் என பட்டியல் நீண்டு கொண்டே போகும் பொழுது மிகவும் பிரபலமான லைம் லைட்டில் உள்ள விஜய் சேதுபதியை தேர்ந்தெடுத்தது விஜய் டிவி. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக தயாராகி வருகிறார் விஜய் சேதுபதி.

ஆரம்பிக்கும் முன்னே அழிச்சாட்டியம் செய்த விஜய் டிவி

விஜய் சேதுபதி கமிட்டான படங்களை எல்லாம் முடித்து விட வேண்டுமாம் அப்படி இல்லை என்றால் இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டுமென அக்ரிமெண்ட் போட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி. அது மட்டுமின்றி நண்பர்கள் மற்றும் கஷ்டப்படுவோருக்கு எப்பொழுதுமே உதவும் விஜய் சேதுபதிக்கு ஒரு லாக் வைத்துள்ளது.

சின்ன சின்ன படங்களுக்கு ப்ரொமோஷன் கொடுக்கும் வகையில் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் கணக்கில் அந்த படம் சம்பந்தமான விஷயங்களை வெளியிடுவார். இப்பொழுது அதற்கு முற்றிலும் தடை போட்டு, இனிமே எந்த ஒரு புது பட வேலைகளையும் செய்யக்கூடாது என ஆர்டர் போட்டுள்ளது விஜய் டிவி.

- Advertisement -

Trending News