Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் வீடா? அல்லது ரெட் லைட் ஏரியாவா? வெறும் கில்மா ஆட்களை களமிறங்கிய விஜய் டிவி
கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா தாக்கத்தின் காரணமாக சற்று காலதாமதமாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்களை தனிமைப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
இந்நிலையில் ரியோ ராஜ், அனுமோகன், ஜித்தன் ரமேஷ், ஷிவானி நாராயணன், கேபிரெல்லா சர்ல்டன், ரம்யா பாண்டியன்,VJ அர்ச்சனா, சனம் ஷெட்டி ஆகியோரின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 9 பேரும் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாராம்.
அண்மையில் கிடைத்த செய்தியின்படி நடிகை அபிநயஸ்ரீ பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஏற்கனவே பிக்பாஸ் பிக்பாஸ் வீட்டில் சிவானி, ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி, கேப்ரில்லா என கவர்ச்சிக்கு பேர்போன நடிகைகளின் பெயர்கள் உலாவிக் கொண்டிருக்கையில் தற்போது மீண்டும் ஒரு கவர்ச்சி நடிகை பிக்பாஸ் வீட்டில் இடம் பெறுவார் என்ற செய்தி கிடைத்துள்ளது.
ரசிகர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில், “இது என்ன பிக்பாஸ் வீடா இல்லை அடல்ட்ஸ் ஒன்லி வீடா?” என்று கிண்டல் செய்து வருகின்றனர். வேறு சிலர், இந்த சீசனில் கவர்ச்சி சீனியர்கள் இடம்பெற்றிருப்பதால் காம்பெடிஷன் வில்லங்கமா இருக்கிறது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த சீசன்ல காதல் டிராக் இருக்கோ இல்லையோ, கண்டிப்பா கவர்ச்சி டிராக் அதிகமாவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
