Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் டிவியின் ஜாக்குலினா இது? பட்டைய கிளப்பும் புரோமோ வீடியோ.. வேற லெவல்
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான ‘கலக்கப்போவது யாரு’ தொகுப்பாளினியான ஜாக்குலின். இவர் குரலின் மூலம் பல ரசிகர்களை தன் வசம் கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மிமிக்ரி மட்டுமல்லாமல் பல திறமைகள் உள்ள போட்டியாளர்களை வெளி உலகத்திற்கு கொண்டு வரும் கலக்கப்போவது யாரு பிரம்மாண்ட நிகழ்ச்சியாகும். ஜாக்லின் ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து இருப்பார். இது ஒரு முக்கியமான கேரக்டர் என்பது மட்டுமல்லாமல் சிறப்பாகவும் செய்து இருப்பார்.
அவருக்கு இருக்கும் திறமையை பார்த்து பல இயக்குனர்கள் வாய்ப்புகளை தந்த வண்ணம் உள்ளனர். தற்போது சினிமாவில் மிகவும் பிஸியாக உள்ள ஜாக்லின் மீண்டும் விஜய் டிவி சீரியலுக்கு வந்துள்ளார்.
தேன்மொழி என்ற சீரியலின் ப்ரோமோ வீடியோ விஜய் டிவியின் மூலம் ஒளிபரப்பப்பட்டது தற்போது அது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.
