fbpx
Connect with us

வாய்க் கொழுப்பால் அழியும் விஜய் டிவி ஜாக்குலின்.. உனக்கு எதுக்குமா இந்த வேலை!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வாய்க் கொழுப்பால் அழியும் விஜய் டிவி ஜாக்குலின்.. உனக்கு எதுக்குமா இந்த வேலை!

விஜய்டிவி பிரபலங்களுக்கு எப்போதுமே கொஞ்சம் வாய்க்கொழுப்பு இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

தாங்கள் தான் இந்த உலகத்தையே கட்டிக் காப்பது போல அவர்கள் செய்யும் பந்தாவுக்கு அளவே இருக்காது.

அந்தவகையில் தொகுப்பாளராக இருக்கும் போது அவ்வப்போது சீன் போடும் ஜாக்குலின் ஹீரோயின் ஆன பிறகு சும்மா இருப்பாரா.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி பிஏ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் கல்யாண கெட்டப்பில் ஆரம்பத்தில் போட்டோ ஷூட் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது ஆரம்பத்திலேயே திருமணம் கெட்டப்பில் நடிக்கிறீர்களே உங்களுடைய மார்க்கெட்டுக்கு பிரச்சினை வராதா என கேள்வி எழுப்பியுள்ளார்கள் தொகுப்பாளர்கள்.

வராது என்று சொல்லி இருக்கலாம் அல்லவா. இவங்க தான் ஹீரோயின் ஆச்சே. 35 வயதில் ஹீரோயின்கள் பள்ளி உடை அணிந்து நடிக்கும்போது நான் திருமணக்கோலத்தில் நடிக்கக் கூடாதா என தேவையில்லாமல் வாய்விட்டு உள்ளார்.

ஜாக்குலின் தன்னை திரிஷா ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு அபியும் நானும் படத்தில் நடித்த திரிஷாவை நேரடியாகக் அசிங்கப் படுத்தி உள்ளார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் செம ஓட்டு ஓட்டி வருகின்றனர்.

jacqueline1

jacqueline

Continue Reading
To Top