விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி இன்று ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்த உள்ளது.நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து பங்கேற்ற போட்டியாளர்களாக இருந்து நேயர்களால் குறைந்த வாக்குகளைப் பெற்று நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்ட ஜுலி, ஆர்த்தி ஆகியோர் இன்று மீண்டும் நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர்.வாக்களித்த நேயர்களின் கருத்துக்களுக்குத் துளியும் இடம் கொடுக்காமல் பிக் பாஸ் நிகழ்ச்சியாளர்கள் அவர்களாகவே ஜுலி, ஆர்த்தியை மீண்டும் வரவழைத்தது நேயர்களுக்குப் பிடிக்கவில்லை.இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி மொத்தமாக மூன்று புரோமோக்களை வெளியிட்டது. அதில் கமெண்ட்டு பகுதியில் நேயர்கள் பலரும் அவர்களது கோபங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இன்று மாலை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற ஓவியா டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். மூன்று மணி நேரத்திற்குள் அந்த டிவீட்டுக்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது.
அந்த டிவீட்டிற்கு 21 ஆயிரம் லைக்குகளும், 7300 ரிடிவீட்டுகளும், 4600 கமெண்ட்டுகளும் இதுவரை கிடைத்துள்ளன.பல பிரபலங்களும் ஓவியா டிவிட்டருக்கு மீண்டும் வந்தது குறித்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.’மக்களின் பிக் பாஸ் ஓவியா’ #peoplesbigbossoviya என்ற ஹேஷ்டேக்கும்

அதிகம் படித்தவை:  பிக்பாஸ் காதலர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைகிறார்கள்,ஒரு அதிர்ச்சி செய்தி.

இன்று மாலை டிவிட்டர் டிரென்டிங்கில் வந்தது.காலை முதல் விஜய் டிவியின் டிவிட்டரில் போடப்பட்ட இன்றைய பிக் பாஸ் புரோமோக்களுக்குப் பெரிய வரவேற்பில்லை.ஓவியாவின் டிவீட்டுக்குக் கிடைத்துள்ள வரவேற்பில் கால் பங்கு கூட விஜய் டிவியின் இன்றைய பிக் பாஸ் டிவீட்டுகளுக்குக் கிடைக்கவில்லை.விஜய் டிவியின் மூன்று டிவீட்டுகளுக்கும் சேர்த்து 7700 லைக்குக்ள் மட்டுமே கிடைத்தன. ஓவியான் டிவீட் இதை விட மூன்று மடங்கு லைக்குகளை வாங்கியிருக்கிறது.

ஜுலி, ஆர்த்தி மீண்டும் நிகழ்ச்சிக்குள் வந்துள்ள நேரத்தில் ஓவியாவின் இன்றைய டிவீட்டும் அந்த நிகழ்ச்சி குறித்து ரசிகர்களின் ஆதங்கத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது.ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வெற்றி அதை நடத்துபவர்களை விட, அதில் கலந்து கொள்பவர்களை விட அதைப் பார்க்கும் மக்கள் கையில்தான் உள்ளது என்பது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியாளர்களுக்கு எப்போது புரியும்.