சின்னத்திரை உலகில் நல்ல வரவேற்படைந்த நபர்கள் வெள்ளித்திரைக்கு வருவது சகஜம். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பிரபல பொழுது போக்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளர்களாக அறிமுகம் ஆகி இன்று தமிழ் திரை உலகில் முன்னணி இடத்தை பிடித்தவர்களும் பலர்.

அதற்க்கு உதாரணம் நடிகர் சந்தானம், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் ம.கா.ப.ஆனந்த் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளவர் வி.ஜே ஜாக்குலின். ‘கலக்கப்போவது யாரு’ உட்பட பல நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

இவர் தற்போது தமிழ் திரை உலகில் கால் பாதிக்க உள்ளார். அதுவும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவோடு. ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தோழியாக நடித்து வருகிறார் ஜாக்குலின்.