பிக்பாஸ் தொடரில் இருந்து தான் வெளியேற விரும்புவதாக ஜூலி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஜூலியை வைத்தே தங்களது டிஆர்பியை ஏற்றுகிறார்கள் என்ற பலரின் குற்றச்சாட்டு அடுத்தடுத்த தொடர் மூலம் உறுதியாகி வருகிறது.

பிக்பாஸின் நேற்றைய நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதியது தாயுமானவர் என்று கூறவைத்து ஜூலியை சர்ச்சையில் சிக்க வைத்த பிக்பாஸ், நாளையை நிகழ்விலும் மீண்டும் ஜூலியை குறிவைத்துள்ளது.

இன்றைய நாள் தொடர் முடிவடைந்ததை தொடர்ந்து ஒளிபரப்பட்ட நாளைய நாளுக்கான ப்ரமோவில் ஜூலியை நடன இயக்குநர் காயத்திரி ரகுராம் அடிக்க பாய்வது போன்று காட்டியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஆர்த்தியும் ஜூலியை திட்டுவது போன்று காட்டியுள்ளது, இதனால் ஜுலி அழுது கொண்டே பிக்பாஸிடம் நான் இப்போதே எனது வீட்டுக்கு போக வேண்டும், எனக்கு கொடுப்பதாக கூறிய பணத்தை கொடுத்து விடுங்கள் என்று ஆவேசமாக கூறுகிறார்.

நாளை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.