பிக்பாஸ் சீசன்-4 தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. செம்ம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

அப்படி இப்படி என கடந்த சில மாதங்களாகவே பிக்பாஸ்4(Bigg Boss Tamil Season 4) நிகழ்ச்சி பற்றிய வதந்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் ஒரு வழியாக பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி தொடங்குவதற்கான தேதியை அறிவித்து விட்டனர்.

முதலில் ஹிந்தியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி அதனை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் வருடாவருடம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 3 சீசன்களை கடந்து தற்போது தமிழில் நான்காவது சீசன் தொடங்கி உள்ளது. இதற்காக பெரும்பாலும் விஜய் டிவியை சேர்ந்த நடிகர் நடிகைகள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

பெரும்பாலும் விஜய் டிவி பிரபலங்கள் தான் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படும் தேதி குழப்பத்தில் இருந்த நிலையில் தற்போது விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்குகிறது. அன்று முதல் தினமும் இரவு 9.30 மணிக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது.