Tamil Nadu | தமிழ் நாடு
விஜய் டிவியின் பிரபல காமெடியன் வடிவேல் பாலாஜி காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
விஜய் டிவியின் பிரபல காமெடி கதாநாயகனாக வலம் வந்தவர் வடிவேல் பாலாஜி. இவர் திடீரென்று உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதனால் விஜய் டிவி மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். விஜய் டிவியின் அது இது எது, ஜோடி நம்பர்-1, கல்யாணம் முதல் காதல் வரை போன்ற பிரபல நிகழ்ச்சிகளில் நடித்து ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வடிவேல் பாலாஜி.
வடிவேலின் முழு தோற்றத்தை, அவரது ஸ்டைலில் டயலாக் டெலிவரி என்று ரசிகர்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர்.
தனது 42 வயதில் உயிர் பிரிந்தது, ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது, அவர்கள் குடும்பத்திற்கு தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவர் இறந்ததற்கு கொரோனா ஒரு காரணம் இல்லை என்பதை தெளிவாக வெளியிட்டுள்ளனர்.
கோடான கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த வடிவேல் பாலாஜியின் குடும்பத்தினருக்கு திரை உலகம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
