Connect with us
Cinemapettai

Cinemapettai

nanjil-vijayan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வீடு புகுந்து விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனை வெட்ட பார்த்த பெண்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் பணியாற்றும் அனைத்து பிரபலங்களும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் நீண்ட காலமாக விஜய் டிவியில் காமெடி நடிகராக இருந்தவர் நாஞ்சில் விஜயன்.

பெண் வேடமிட்டு காமெடி செய்வதில் மிகவும் பிரபலமானவர். இவர் சமீபத்தில் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வந்தார்.

இவருடன் சேர்ந்து சூர்யா தேவி என்ற பெண்ணும் வனிதாவை வசை பாடி வந்தார். இந்நிலையில் அந்த சர்ச்சைகள் ஓய்ந்து வனிதா தற்போது தன்னுடைய கணவருடன் ஹனிமூன் சென்று ஜாலியாக உள்ளார்,.

ஆனால் நாஞ்சில் விஜயனை சென்னையில் ஒரு ரவுடி கும்பலை வைத்து கொண்டு அவரது வீடு புகுந்து வெட்ட முயன்றதாக சூர்யா தேவி மீது குற்றம் சாட்டியுள்ளார் நாஞ்சில் விஜயன்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரவுடிகளுடன் வந்து தாக்கிய புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

nanjil-vijayan-cinemapettai

nanjil-vijayan-cinemapettai

ஆனால் ஒரு காலத்தில் நாஞ்சில் விஜயன் மற்றும் சூரியா தேவி ஆகிய இருவரும் சேர்ந்து கொண்டு வனிதாவை வசை பாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top