Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் கணவர் இறந்து ஒரு வருடம்தான்.. அதுக்குள்ள அடுத்த கல்யாணத்துக்கு ரெடியான மைனா
விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனா என்ற கேரக்டர் வெகு பிரபலமானது. அதில் நடித்தவர் நந்தினி. அதன் பிறகு சினிமா, சீரியல் என அவரது வாழ்க்கை ஓஹோவென சென்றது.
வெள்ளித்திரையில் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. புகழின் உச்சத்திற்கு சென்ற மைனா என்கிற நந்தினி, ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் குடும்பச் சுமை காரணமாக அவர் திருமணமான சிறிது நாட்களிலேயே தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து சில நாட்கள் நடிப்பை ஒதுக்கி வைத்திருந்த நந்தினி, தற்போது பிரபல தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் சீரியல் நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதை உறுதி செய்யும் வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதை ஆதரிக்க ஒரு கூட்டம் இருந்தாலும், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நெட்டிசன்கள் ஒரு பக்கம் விளாசி கொண்டிருக்கின்றனர்.

nandhini-husbands
