சார்பட்டா படத்தில் கவனிக்கப்படாமல் போன விஜய் டிவி பிரபலம்.. உசுரக் கொடுத்து கத்தினாரேபா!

ஆர்யா மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அதற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆர்யாவை தவிர நாயகியாக நடித்த துசாரா விஜயன், வில்லனாக நடித்த வேம்புலி கதாபாத்திரம், சபீர் நடித்த டான்சிங் ரோஸ் கதாபாத்திரம், ஜான் விஜய் நடித்த டாடி கதாபாத்திரம், பசுபதி நடித்த ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் என சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் சரிசமமான முக்கியத்துவம் கொடுத்து சமீபகாலமாக எந்த ஒரு படமும் வெளிவராததால் சார்பட்டா படத்தை தமிழ் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் இதில் கடைசி வரை கவனிக்கப்படாத கதாபாத்திரமாக போனது விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான டைகர் தங்கதுரை கதாபாத்திரம் தான். ஒவ்வொரு சண்டையும் நடக்கும் போதும் அதை தாங்கி பிடித்தது தங்கதுரையின் பேச்சுதான்.

போட்டி வர்ணனையாளராக சென்னை தமிழில் அவர் பேசிய வசனங்கள் தான் அந்த சண்டைக் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தது என்று சொன்னால் மிகையாகாது. இப்படி உயிரை கொடுத்து பேசியும் அவரது முகத்தை காட்டாமல் போனதாலோ என்னவோ அவருடைய கதாபாத்திரத்திற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

டைகர் தங்கதுரை ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் சார்பட்டா படத்தில் அவரது தனித்துவமான சென்னை தமிழ் பேச்சு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இருந்தாலும் மற்ற நடிகர்களின் உழைப்புகள் பெரிதும் பேசப்பட்டதால் தங்கதுரையின் கதாபாத்திரம் இலைமறைகாயாக போய் விட்டது.

tiger-thangadurai-cinemapettai
tiger-thangadurai-cinemapettai
- Advertisement -spot_img

Trending News