Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல தொகுப்பாளினி டிடிக்கு கிடைத்த கௌரவம்.. வயசு ஆக ஆக மவுசு ஏறிட்டே போகுதுபா
டிடி என்றால் மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருக்கும் பிடித்த நபர். இவருக்கு தற்போது டார்லிங் ஆப் தி டெலிவிஷன் அவார்ட் கிடைத்துள்ளது. இதனால் மிகுந்த சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்.
சென்னையில் நடைபெறும் பேஷன் ஷோக்களில் மிகவும் பிரபலமானது D AWARD மற்றும் DAZZLE STYLE ICON AWARD இணைந்து பிரம்மாண்டமாக நடத்தியது. இதில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தனக்கு கிடைத்த டார்லிங் ஆப்தே டெலிவிஷன் அவார்ட் பற்றி டிடி கூறியதாவது :
டார்லிங் என்று கூப்பிட்டால் அனைவருக்குமே பிடிக்கும். டார்லிங் ஆப்த டெலிவிஷன் என்று சொன்னால் எனக்கு இன்னும் சந்தோசமாக உள்ளது. மேலும் நான் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு விதமான ஆடைகளை அணிய விரும்புவேன்.
எனக்கு டிசைன் செய்து கொடுக்கும் டிசைனர்களுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருப்பேன். மேலும் அவர்களுக்கு இதனால் ஒரு பெரிய வாய்ப்புக் கூட கிடைக்கும். ஆகையால் தான் இந்த சீசன் முழுவதும் நான் புடவை அணிந்தே தொகுத்து வழங்கினேன் என்று புன்னகை மலர கூறியுள்ளார்.
