Tamil Cinema News | சினிமா செய்திகள்
குழந்தை நட்சத்திரத்திற்கு பிறந்த குழந்தை.. இரண்டில் எது குழந்தை என ரசிகர்கள் குழப்பம்
2001-ம் ஆண்டு நடன இயக்குனர் பிரபுதேவா நடித்த அள்ளித்தந்த வானம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி. அதனைத் தொடர்ந்து ரமணா போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பெயர் பெற்றவர்.
திரைப்படங்களைத் தொடர்ந்து சீரியல்களிலும் கவனம் செலுத்தி நடித்தவர் கல்யாணி என்கிற பூர்ணிமா. பிரபல தொலைக்காட்சியில் இவர் நடித்த ஆண்டாள் அழகர் சீரியல் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் ஆக உள்ளது. இவர் தமிழ் நாட்டிலுள்ள கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர்.
சீரியல்களை தொடர்ந்து தொகுப்பாளராகவும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த என்ற மருத்துவரை மணந்து அங்கேயே செட்டிலாகிவிட்டார். கடந்த வருடம் இவர்களுக்கு நவ்யா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது.
ரோகித் மட்டும் கல்யாணி தம்பதியர் தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய புகைப்படங்களை கல்யாணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குழந்தை மாதிரி இருக்கிறவங்களுக்கு ஒரு குழந்தையா என ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

kalyani-rohit

kalyani-rohit-01
