Connect with us
Cinemapettai

Cinemapettai

sun-vijay-tv

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போயும் போயும் சன் மியூசிக் நிகழ்ச்சியை காப்பியடித்த விஜய் டிவி.. TRPக்காக இப்படியா, அதுவே ஒரு மொக்க ஷோ!

சமீபகாலமாக விஜய் டிவிதான் நல்ல நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது என பெருமூச்சு விட்டால் தற்போது போயும் போயும் சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியை காப்பியடித்துள்ளது பலருக்கும் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரியாலிட்டி ஷோ என்றால் கிங் விஜய் டிவிதான். பொதுமக்களை கவரும்படி வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ், குக் வித் கோமாளி, காமெடி நிகழ்ச்சிகள் போன்றவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மேலும் சமீபகாலமாக சன் டிவி சொதப்பி வருவதால் அதை ஒரேயடியாக ஒழித்துக் கட்ட விஜய் டிவி நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்பி வருகிறது. பெரும்பாலும் விஜய் டிவி நிறுவனம் ரியாலிட்டி ஷோக்களை மட்டுமே குறி வைத்து வருகிறது.

அந்த வகையில் அடுத்ததாக குக் வித் கோமாளி நட்சத்திரங்களைக் கொண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப உள்ளனர். ஆனால் இதே பெயரில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் யூடியூப் பிரபலம் சித்து என்பவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஒரு காலத்தில் சன் மியூசிக் என்றால் இளம் ரசிகர்களிடையே ஒரு தனி வரவேற்பு இருக்கும். சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல இளம் தொகுப்பாளர்கள் செம வரவேற்பை பெற்றனர். அதுவும் குறிப்பாக ரியோ, அஞ்சனா போன்றோர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் செம டிஆர்பி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சமீபகாலமாக சன் டிவி நிறுவனம் யூ டியூப் பிரபலங்களை வைத்து தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. பெயருக்கு சன் மியூசிக் என்ற சேனலை வைத்து ஓட்டிக் கொண்டிருப்பது போல ரசிகர்களுக்கு தோன்ற ஆரம்பித்துவிட்டது. அந்த அளவுக்கு படு மொக்கையான தொகுப்பாளர்கள், நிகழ்ச்சிகள் என செம போர்.

varuthapadatha-valibar-sangam

varuthapadatha-valibar-sangam

தற்போது அந்த நிகழ்ச்சியை போய் விஜய் டிவி காப்பி அடிக்கிறார்களே என ரசிகர்கள் கிண்டலடிக்கின்றனர். தலைப்பை மட்டும் தான் காப்பியடித்துள்ளதான் விஜய் டிவி. ஆனால் நிகழ்ச்சி வேறு மாதிரி என்டர்டெய்மெண்ட்டாக இருக்கும் என விஜய் டிவி தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.

Continue Reading
To Top