குக் வித் கோமாளி சீசன் 4ன் இந்த வார எலிமினேஷன்.. ஃபேவரிட் போட்டியாளர் வெளியேறியதால் கதறும் கோமாளிகள்

சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் என்டர்டைன்மென்ட் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு எலிமினேஷன் நடைபெறும். அந்த வகையில் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்டவர் யார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

எலிமினேட் செய்யப்பட்ட நபர் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அங்கிருக்கும் கோமாளிகளின் ஃபேவரைட் போட்டியாளர் என்பதால் கதறி கதறி அழுது வழி அனுப்பி வைத்தனர். இதுவரை சீசன் 4ல் கிஷோர், காளையன் ஆகியோர் ஏற்கனவே எலிமினேட் ஆகிவிட்ட நிலையில், கோமாளி மணிமேகலையும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

Also Read: 10 பட வாய்ப்பை வேண்டாம் என உதறிய சூரி.. அஸ்வினை போல் வாயை விட்டு மாட்டிக்கிட்டியே பங்கு

இந்நிலையில் இன்று மற்றொரு போட்டியாளர் எலிமினேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நடுவர்கள் இருந்ததால், டேஞ்சர் ஜோனில் இருந்த ஷெரின் மற்றும் ராஜ் ஐயப்பா இருவருக்கும் இடையே எலிமினேசன் சுற்று நடைபெற்றது. இதில் நடுவர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் ராஜ் ஐயப்பன் தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படும் போட்டியாளர் என்று அறிவித்தனர்.

இதைக் கேட்டதும் அங்கிருக்கும் குக் மற்றும் கோமாளிகள் அனைவரும் பெரும் வருத்தம் அடைந்தனர். ஏனென்றால் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் சாக்லேட் பாயாக வலம் வந்த ராஜ் ஐயப்பா அனைவருக்கும் பிடித்தமான போட்டியாளர். ஆகையால் அவர் வெளியேறியதால் பலரும் கலக்கம் அடைந்தனர்.

Also Read: நடிகையுடன் ஏற்பட்ட சர்ச்சை.. அதிரடியாக நடந்த குக் வித் கோமாளி 4 எலிமினேஷன்

இவருக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். இன்னும் சில வாரங்கள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ராஜ் ஐயப்பா வலிமை படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்ததன் மூலம் பேமஸானார். இவர் சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும், இன்னும் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அவர் நினைத்தது போல் இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார். இதனால் இவருக்கு இனி வரும் நாட்களில் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ஊத்தி மூடப் போகும் குக் வித் கோமாளி சீசன் 4.. அதிரடியாக வெளியேறிய பிரபலம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்