தொடர் தோல்வியை சந்தித்து வரும் விஜய் டிவி சேனல்.. சீரியலிலும் ரியாலிட்டி ஷோவிலும் வச்ச சூனியம்

Vijay Tv: விஜய் டிவி ஒரு நேரத்தில் கலக்கப்போவது யாரு, அது இது எது, சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வெற்றியை கொடுத்து வந்தது. அடுத்து சீரியலிலும் கவனம் செலுத்தும் விதமாக தொடர்ந்து பல சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது. இன்னொரு பக்கம் குக் வித்து கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர் வெற்றிகளை பார்த்து வந்தது.

ஆனால் திடீரென்று விஜய் டிவி சேனலுக்கு சூனியம் வைத்தது போல் யார் கண்ணு பட்டுச்சோ எல்லாம் தடம் புரண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் பிரதீப்புக்கு கொடுத்த ரெட் கார்டு மூலம் மொத்தமாக மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து விட்டது. அதை வருகிற சீசனில் மாற்றும் விதமாக மக்கள் செல்வனாக இருக்கும் விஜய் சேதுபதியை வைத்து ஆரம்பிக்கப் போகிறார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக அடி வாங்கும் விஜய் டிவி சேனல்

அதே மாதிரி பிக் பாஸ் நிகழ்ச்சியை விட குக் வித்து கோமாளிக்கு மக்கள் பெரிதும் ஆதரவு கொடுத்து வந்தார்கள். ஆனால் வெங்கட் பட் மற்றும் பல போட்டியாளர்கள் இதிலிருந்து விலகி சன் டிவிக்கு போனதால் கொஞ்சம் அடி வாங்கிவிட்டது. இருந்தாலும் மக்களிடம் இருந்த ஒரு வரவேற்பினால் கோமாளி சீசன் 5 ஆரம்பிக்கப்பட்டது.

இதில் மணிமேகலை மற்றும் பிரியங்காவுக்கு ஏற்பட்ட பஞ்சாயத்தினால் தற்போது ஒட்டுமொத்தமாகவும் இந்த நிகழ்ச்சி மக்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்து விட்டது. அதிலும் தற்போது பிரியங்கா தான் இந்த போட்டியின் வின்னர் ஆகியிருக்கிறார் என்று தகவல் வெளியானதும் இதெல்லாம் விஜய் டிவி நடத்தும் அரங்கேற்றம். யாருக்கு திறமை இருக்கிறதோ அவர்களுக்கு வெற்றி பரிசை கொடுக்காது.

விஜய் டிவி பொருத்தவரை அவர்களுடைய சொம்பு தூக்கிகளுக்கு தான் பாரபட்சம் பண்ணி பரிசை கொடுப்பார்கள் என்பதற்கு ஏற்ப மக்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் சீரியலில் ஓரளவுக்கு இரண்டாவது இடத்தை பிடித்து வந்த விஜய் டிவி சீரியல் தற்போது ஒட்டுமொத்தமாக சரிந்து விட்டது.

அந்த வகையில் சிறகடிக்கும் ஆசை சீரியல்தான் மக்களின் பேவரைட் சீரியலாக இருந்தது. ஆனால் தற்போது கதை எதுவும் இல்லாமல் ரோகினி, யாரிடமும் மாட்டாமல் முத்து மற்றும் மீனாவிற்கு தொடர் பிரச்சினைகள் வருவதால் இந்த நாடகத்தை மொத்தமாக மக்கள் வெறுத்து ஒதுக்கி விட்டார்கள். இதற்கு அடுத்தபடியாக பாக்கியலட்சுமி சீரியலில் கதை எதுவும் இல்லாமல் அரைச்ச மாவை அரைத்து வைத்து மட்டமாக கதையை கொண்டு வருவதால் இதையும் பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள்.

இப்படி ஒவ்வொரு சீரியலும் அடி வாங்கிக் கொண்டு வருவதால் விஜய் டிவி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதையெல்லாம் மீட்டெடுக்கும் விதமாக வரப்போகிற பிக் பாஸ் சீசன் 8 தான் முழுமையாக நம்பி இறங்கப் போகிறார்கள். அதற்காக மொத்த பொறுப்பையும் விஜய் சேதுபதியிடம் ஒப்படைத்து அவருக்கு அளவுக்கு அதிகமாக சம்பளமாக 60 கோடி சம்பளத்தையும் கொடுத்து லாக் பண்ணி இருக்கிறார்கள். அந்த வகையில் விட்டதை பிடிக்கும் வகையில் விஜய் டிவி சேனலுக்கு வெற்றி கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -spot_img

Trending News