புதன்கிழமை, நவம்பர் 13, 2024

பயில்வானை நாய் என்று திட்டிய விஜய் டிவி பிரபலம்.. இது பத்தாது.. ரெண்டு சாத்து சாத்திருக்கணும்

சில நாட்களாகவே ட்ரெண்டிங்கில் இருக்கிறார் செஃப் வெங்கடேஷ் பட். இவரை பற்றி ஏதாவது ஒரு செய்தி வந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் டாப் குக் டூப் குக் நடுவராக சன் டிவி ஒப்பந்தத்திற்கு சென்றார். அன்றிலிருந்து இவர் மீது பலர் பல விதமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

வாய்க்கு வந்த படி பேசும் பயில்வான்

பயில்வான் பற்றி எல்லாருக்கும் தெரியும். அவர் வாய்க்கு வந்த படி, அதுவும் நடிகைகளை பற்றி கொச்சையாக பல கருத்துக்களை பதிவிடுவார். இதற்க்கு விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தாலும் அதை எதையும் பொருட்படுத்தாமல் தான் செய்வதை ஒரு மிக பெரிய சேவையாக எண்ணி, தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

வெங்கடேஷ் பட்டை இழுத்து விட்ட பயில்வான்

இப்படி பட்ட சூழ்நிலையில், செஃப் வெங்கடேஷ் பட்டை பற்றியும் தவறான செய்திகளை பரப்ப ஆரம்பித்தார் பயில்வான் ரங்கநாதன். அவருக்கு சன் டிவி யில் கோடிகளில் சம்பளம், அதனால் தான் வளர்த்து விட்ட விஜய் டிவி க்கு துரோகம் செய்து விட்டார் என்று பேசி இருந்தார்.

இதற்க்கு வெங்கடேஷ் பட் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை என்றாலும், சூட்சமமாக பயில்வானுக்கு பதிலடி கொடுத்துள்ளார் வெங்கடேஷ் பட். அதுவும், பயில்வானை நாய் என்றே திட்டி விட்டார். “எந்த நாய் வேண்டுமானாலும், எப்படி வேண்டும் என்றாலும் பேசட்டும். சாணியில் கல் எறிந்தாள் நம் மீது தான் தெறிக்கும். அது நமக்கு தான் அசிங்கம். தயவுசெய்து அசிங்கமாக திட்டி கமெண்ட்களை பதிவிட வேண்டாம். அவருடைய நிலைமை என்னவென்று தெரியவில்லை பாவம் அவர் பணத்திற்காக செய்கிறாரா, மனநிலை சரியில்லாமல் செய்கிறாரா தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

venkatesh-bhatt
venkatesh-bhatt

இதை விட யாராலயும் செருப்பால் அடித்தது போல் பதில் சொல்லமுடியாது.. இனிமேவாது திருந்துங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News