வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

திமிங்கலங்களுக்கு நடுவில் சிக்கிய மீன் குட்டி சாச்சனா.. பிக்பாஸ் 8 Day 1

Biggboss 8 Day 1: விஜய் டிவியின் டிஆர்பி கிங் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 8 தற்போது ஆரம்பித்துள்ளது. முதல் நாளிலேயே ஏகப்பட்ட ட்விஸ்ட், ரணகளம் என தொடங்கி இருக்கிறது. அதில் சில முக்கியமான விஷயங்களைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.

முதல் நாள் காலை புதுப்பேட்டை பட பாடலோடு தொடங்கியது. எல்லோரும் ஆர்வத்துடன் நடனமாடி கலக்கினார்கள் ரவீந்தரை தவிர. அதன் பிறகு ஜாப்ரியின் கானா, ஆண்கள் மற்றும் பெண்களின் விதிமுறைகள் என நேரம் கடந்தது.

இதில் பாய்ஸ் டீமின் விதிமுறைகள் கொஞ்சம் ஓவராக இருந்தது. அதே சமயம் பெண்களுடைய ரூல்ஸ் சூர மொக்கையாக இருந்தது. இதில் பவித்ரா ஆண்கள் எப்போதுமே ஒரே டீம் ஆக இருப்பார்கள் ஆனால் பெண்கள் அப்படி கிடையாது எனக் கூறியது 100 சதவீதம் உண்மை.

அதன் பிறகு தான் போட்டியாளர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 24 மணி நேரத்தில் ஒரு எலிமினேஷன் என்ற பிக் பாஸின் உத்தரவு. அனைவரும் இதை எதிர்பார்க்கவில்லை என்றாலும் தங்களை காப்பாற்றிக் கொள்ள ஒரு பலியாடை தேர்ந்தெடுக்க தொடங்கினர்.

அதிரடியாக வெளியேற்றப்பட்ட சாச்சனா

அதில் சிக்கியது விஜய் சேதுபதியின் ரீல் மகள் சாச்சனா. சும்மா இருந்திருந்தால் கூட இவர் பெயரை யாரும் சொல்லி இருக்க மாட்டார்கள். ஆனால் பிக் பாஸ் வீட்டுக்குள் அனைவரும் முதுகில் குத்துவார்கள் என தெரியாத அந்த சிறு பெண் நான் வேணா போகிறேன் என ஒரு வார்த்தையை விட்டு விட்டார்.

இது நல்ல ஐடியாவா இருக்கே என ஒட்டு மொத்த பேரும் அவரை நாமினேட் செய்து துரத்தி விட்டதுதான் கொடுமை. இதை எதிர்பார்க்காத அவரும் கண்ணீருடன் வெளியேறியது பார்க்கவே பாவமாக இருந்தது. திமிங்கலங்களுக்கு நடுவில் சிக்கிய மீன் குட்டியாக தான் அவர் தெரிந்தார். நிச்சயம் இது நியாயம் இல்லாத எலிமினேஷன் தான்.

அவர் சென்ற பிறகு அர்னவ் சப்போர்ட் செய்வது போல் பேசி தன்னை நல்லவராக காட்ட முயற்சி செய்தார். ஆனால் அது ஓட்டை பக்கெட்டில் தண்ணீர் ஊற்றிய கதைதான். அதே போல் நம் தலைவன் ரஞ்சித் கூட அவ்வப்போது பூமர் அங்கிள் ரேஞ்சுக்கு பேசி சலிப்பூட்டினார்.

இது ஒரு பக்கம் இருக்க முத்துக்குமரன் பேசிப் பேசியே நல்ல பெயர் வாங்க முயற்சிக்கிறார். அதேபோல் ஜாக்லின் புதுசா ஏதோ ட்ரை செய்கிறேன் பேர்வழி என கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் இந்த வாரம் தர்ஷிகா கேப்டன் ஆகி உள்ளார்.

அவரை தவிர மற்றவர்களை வைத்து நடந்த நாமினேஷனில் ரவீந்தர், அருண், ரஞ்சித், ஜாக்குலின், முத்துக்குமரன், சௌந்தர்யா ஆகியோர் அதிக ஓட்டுகளை பெற்று தேர்வாகியுள்ளனர். இவர்களில் யார் இந்த வாரம் வீட்டை விட்டு செல்வார்கள் என்பதில் பெரிய திருப்பம் ஒன்றும் இல்லை. ரவீந்தர் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

முதல் நாளிலேயே ரணகளமாக ஆரம்பித்த பிக் பாஸ்

- Advertisement -

Trending News