விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த பாலா தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பட்டையைக் கிளப்பி வருகிறார். அதில் அவர் செய்யும் கலாட்டாக்கள், ரைமிங் காமெடி அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.
இதனால் அவர் தற்போது சின்னத்திரையில் அதிக அளவில் பிரபலமாகி வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த விருது வழங்கும் நிகழ்வில் கூட இவருக்கு சிறந்த காமெடியன் என்ற அவார்டு கொடுக்கப்பட்டது. மேலும் பாலா இந்த இடத்திற்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார் என்றும் அந்த நிகழ்வில் காட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து பாலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனக்கு கிடைக்கும் பரிசு பொருட்களை ஆதரவற்ற இல்லங்களுக்கு அனுப்புவது குறித்த வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது. மேலும் பாலா பல உதவிகளையும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு செய்து வருகிறார்.
படிக்க வசதி இல்லாத குழந்தைகளுக்கு உதவி செய்வதே தன்னுடைய லட்சியம் என்றும் பாலா அந்த நிகழ்ச்சியில் கூறினார். அவருடைய இந்த நல்ல மனசை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலா ரோட்டோரத்தில் அமர்ந்து சாப்பிடும் ஒரு வீடியோ சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.
அதில் பாலா ஒரு கடையில் உணவை வாங்கி விட்டு அங்கு அமர்ந்து சாப்பிட முடியாத நிலையில் ஒரு பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து சாப்பிடுகிறார். அந்த வீடியோவை பார்த்த பலரும் பாலா எவ்வளவு எளிமையாக இருக்கிறார் என்று அவரை பாராட்டுகின்றனர்.
ஆனால் ஒரு சில ரசிகர்கள் பாலா சிம்பிள் என்ற பெயரில் ரசிகர்களிடம் அனுதாபத்தை பெறுவதாகவும் கூறுகின்றனர். இதற்குப் பின்னால் அவர் பப்ளிசிட்டியை தான் எதிர்ப்பார்க்கிறார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் பாலாவின் ரசிகர்கள் அவருக்கு தங்கள் ஆதரவை தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.