செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

டிஆர்பி ரேட்டிங்கில் சோடைப்போன பாக்யா சீரியலை தூக்கிய விஜய் டிவி.. கெத்தாக வரும் மக்களின் பேவரைட் சீரியல்

Vijay Tv Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்கள் அனைத்துமே மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள். அதிலும் ஒரு சில சீரியல்கள் மக்களின் பேவரைட் நாடகமாக இருக்கிறது. சில சீரியல்கள் ஆரம்பத்தில் டாப் இடத்தில் இருந்தாலும் அரைச்ச மாவையே அரைத்துக் கொண்டு ஆயிரம் எபிசோடை தாண்டியதால் தற்போது மக்களுக்கு போரடித்து விட்டது.

அதனால் அந்த சீரியலை முடிக்க சொல்லி கமெண்ட்ஸ்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இதற்கு இடையில் புது சீரியல்களும் வந்த நிலையில் பழைய சீரியல்களில் மொக்கையாக போய்க் கொண்டிருக்கும் சீரியலை நிறுத்துவதற்கு பதிலாக அந்த நேரத்தை மாற்றுகிறார்கள்.

அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் சோடைப்போன பாக்யா சீரியலை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக புதுசாக வந்து மக்களின் பேவரிட் சீரியலாக ஜொலித்துக் கொண்டிருக்கும் அய்யனார் துணை சீரியல் ஒளிபரப்பு ஆகப்போகிறது. அதாவது இனி தினமும் 8.30 மணிக்கு அய்யனார் துணை சீரியலும்,7 மணிக்கு பாக்கியலட்சுமி சீரியலும் ஒளிபரப்பாக போகிறது.

பாக்கியலட்சுமி சீரியல் கிட்டத்தட்ட 1000 எபிசோடு வரை 8.30 மணிக்கு தான் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் தற்போது பாக்யா சீரியலை விட அய்யனார் துணை சீரியலுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதால் சீரியலை பிரேம் டைமுக்கு மாற்றுகிறார்கள். அந்த வகையில் வருகிற திங்கட்கிழமை முதல் நேரம் மாற்றப்பட்டு வரப்போகிறது.

Advertisement Amazon Prime Banner

Trending News