பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய் டிவியின் விவாகரத்து பார்ட்டி? எகிறும் எதிர்பார்ப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் முக்கியமான ஒன்று பிக்பாஸ். ஹிந்தியில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்தன. இந்நிலையில் தற்போது விஜய் டிவி நிறுவனம் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான வேலைகளை தொடங்கி விட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

எப்போதுமே ஜூன் மாத நடுவில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகும். ஆனால் கடந்த வருடம் கொரானா பிரச்சினையால் கொஞ்சம் கேப்விட்டு ஆரம்பிக்கப்பட்டது. அதேபோல் இந்த வருடமும் பிக்பாஸ் நிகழ்ச்சி லேட்டாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் போட்டியாளர்களை முன்னரே தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது விஜய் டிவி. போனமுறை ஒப்பந்தமான சில போட்டியாளர்கள் வராததால் கடைசி நேரத்தில் சில விஜய் டிவி பிரபலங்களை உள்ளே தள்ளி நிகழ்ச்சியை சொதப்பிவிட்டனர்.

ஆனால் இந்த முறை விஜய் டிவியிலிருந்து ஒரு குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் முதல் அழைப்பு விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினிக்கு சென்றுள்ளதாம்.

டிடி விவாகரத்திற்கு பிறகும் பல சர்ச்சைகளில் சிக்கி வருவதால் இவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் நல்ல டிஆர்பி கிடைக்கும் என்று விஜய் டிவி தூது விட்டுள்ளனர். ஆனால் டிடிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மீதுதான் கண் என்கிறார்கள் அவரது வட்டாரங்கள். எது எப்படியோ, அர்ச்சனா போல் ஆகாமல் இருந்தால் சரி.

dd-cinemapettai
dd-cinemapettai
Advertisement Amazon Prime Banner