Connect with us
Cinemapettai

Cinemapettai

vj-chitra-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சித்ராவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்ன விட்டுருங்க.. கதறும் விஜய் டிவி தொகுப்பாளர்

கடந்த டிசம்பர் 9ஆம் தேதி விஜய் டிவி பிரபலம் சித்ரா தற்கொலை செய்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் அவரது தற்கொலையில் பல மர்மங்கள் இருப்பதாக கருதிய காவல்துறையினர் தற்போது அவரது கணவரை கிட்டத்தட்ட 8 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் ரக்சன் என்பவருக்கும், சித்ராவுக்கும் இடையில் காதல் இருந்ததாகவும், இருவரும் தனிமையில் இருந்த வீடியோவை காட்டி மிரட்டி வந்ததாகவும் ஒரு செய்தி சேனல் பரப்பிய நிலையில் மளமளவென அனைத்து மீடியாக்களும் அந்த செய்தியை தொடர்ந்து வெளியிட்டது.

ஆனால் சமீபத்திய முக்கிய சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கும் ரக்சன், சித்ராவுக்கும் தனக்கும் என்ன தொடர்பு என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார். மேலும் சித்ரா இறந்ததில் மற்றவர்களை விட எனக்குத்தான் வருத்தம் அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மீடியா துறை என்பதால் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி கிடைக்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு பணம் சம்பாதிக்க வேண்டும். புகழ் இருக்கும்போதே செட்டிலாகி விட வேண்டும் என்பதுதான் மீடியா துறையின் அடிப்படை அம்சம்.

விஜய் டிவியில் பணியாற்றி வரும் நானும் சித்ராவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தோம். சித்ராவுக்கு வெளியூர் விழாக்களில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் தனக்கும் உதவி செய்வார் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இருவருக்கும் உள்ள நட்பை காதல் என ஒரு செய்தி நிறுவனம் பரப்ப அதையே அனைத்து மீடியாக்களும் பரப்பி விட்டனர் என வருத்தப்பட்டுள்ளார்.

மேலும் மீடியா துறைக்கு வருவதற்கு முன்னரே தனக்கு திருமணமாகி விட்டது என பலநாள் உண்மையை கூறியுள்ளார். மீடியாவுக்காக இந்த உண்மையை மறைத்த நிலையில், தற்போது அதுவே தனக்கு வினையாக அமைந்து விட்டது என வருத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து இதே போல் செய்திகள் வெளியாவது தனக்கு மன உளைச்சலை கொடுப்பதாகவும் மனம் வருந்தி கேட்டுள்ளார்.

vj-rakshan-cinemapettai

vj-rakshan-cinemapettai

அதனைத் தொடர்ந்து சித்ரா தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோலை கிடையாது எனவும், சித்ராவை இந்த நிலைமைக்கு ஆளாகிக்கியவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டுமெனவும் விரும்புவதாக ரக்ஷன் பேட்டி கொடுத்துள்ளார்.

Continue Reading
To Top