fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பெற்ற தாயிடமே அட்ஜஸ்ட் செய்ய சொல்லி கேட்ட பிரபல இயக்குனர்.. கதறும் விஜய் டிவி கல்யாணி

kalyani-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பெற்ற தாயிடமே அட்ஜஸ்ட் செய்ய சொல்லி கேட்ட பிரபல இயக்குனர்.. கதறும் விஜய் டிவி கல்யாணி

ரமணா, அள்ளித்தந்த வானம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரின் அன்பையும் பெற்றவர் தான் நடிகை கல்யாணி. இவரது இயற்பெயர் பூர்ணிதா. சிறு வயதில் எப்படி இருந்தாரோ தற்போது திருமணமான பின்னும் அப்படியேதான் சின்ன பொண்ணு போல் இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் உருவான ஆண்டாள் அழகர் சீரியல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சினிமாவில் நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்த்து கொண்டிருந்தார் ரசிகர்களை ஏமாற்றும் வகையில் திடீரென்று திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

சில படங்களில் கிளாமராகவும் நடித்துள்ளார். பின்னர் நடிக்காமல் போன காரணத்தை சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு கூறி அனைவரையும் அதிர வைத்துள்ளார் கல்யாணி. பிரபல இயக்குனர் ஒருவர் கல்யாணியை ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க ஆர்வமாக இருந்தாராம். அந்த விஷயமாக பேச நடிகை கல்யாணி வீட்டுக்கு போன் பண்ணி உள்ளார்.

போனை எடுத்த கல்யாணியின் அம்மாவிடம் படங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென கல்யாணியை அட்ஜஸ்ட் செய்ய சொல்லி கேட்டாராம். உடனே கல்யாணியின் அம்மா டென்ஷனாகி திட்டிவிட்டு கட் செய்து விட்டாராம். அதன்பிறகு கல்யாணிக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் வரவே இல்லை.

தன்னுடைய வக்கிரபுத்தி கொண்ட அம்மாவிடமே பிள்ளையை படுக்கைக்கு அழைத்த இயக்குனரை வாழ்க்கையில் மறக்க முடியாது என பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்கும்போது கல்யாணி குறிப்பிட்டுள்ளார். இவரும் வழக்கம் போல் அந்த இயக்குனரின் பெயரை கூறவில்லை. ஆனால் அவர் விஜய் டிவியில் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்து தற்போது இயக்குனராக மாறி இருப்பவர் எனவும் மேட்டர் லீக் ஆகியுள்ளது.

இந்த மாதிரி பிரச்சனை என்றால் அது இவர்தான் என கை காட்டி விட்டால் அதோடு முடிந்துவிடும். அதை விட்டுவிட்டு பெயர் சொல்ல விரும்பவில்லை என்று கூறுவது பப்ளிசிட்டி செய்வதற்குத் தன்னைத் தானே புரமோட் செய்வது இதுபோன்று ரசிகர்களுக்கு தெரியும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top