Connect with us

Cinemapettai

சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே சீன் போடும் விஜய் டிவி பிரபலம்.. எல்லாம் அந்த பொண்ண சொல்லணும்!

actor

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே சீன் போடும் விஜய் டிவி பிரபலம்.. எல்லாம் அந்த பொண்ண சொல்லணும்!

அது என்னமோ தெரியவில்லை, விஜய் டிவியில் பிரபலமாகி விட்டாலே அவர்களுக்கு இரண்டு கொம்பு முளைத்து விட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள் போல. டாப் நடிகர்கள் ரேஞ்சுக்கு செம பந்தா காட்டுகிறார்களாம்.

மற்ற சேனல்களை காட்டிலும் விஜய் டிவி பிரபலங்கள் சம்பள விஷயத்திலும் சரி பிரபலமாகும் விஷயத்திலும் சரி முன்னிலையிலேயே இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவி பிரபலங்களுக்கு சீக்கிரம் பட வாய்ப்புகள் கிடைத்து விடுகிறது.

இதன் காரணமாகவே முயற்சி செய்யும் பலரும் விஜய் டிவியை டார்கெட் செய்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த சில வருடங்களாக சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில், யூடியூபில் ஒரு பாடலுக்கும் நடனமாடி கொண்டிருந்தவர்தான் அந்த பிரபலம்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று தற்போது கைவசம் இரண்டு மூன்று படங்களில் ஒப்பந்தமாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். விஜய் டிவியிலிருந்து வரும் அடுத்த சிவகார்த்திகேயன் இவர்தான் என்று என்கிற ரேஞ்சுக்கு பில்டப் செய்து கொண்டிருக்கின்றனர்.

அந்த நிகழ்ச்சியில் அந்த பிரபலம் மக்கள் மத்தியில் இவ்வளவு வரவேற்பை பெறுவதற்கு காரணமே அந்த நடிகரை ஜொள்ளு விடுவது போல் நடித்த அந்த சுட்டி பெண் தான் என கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது.

ஆனால் அந்த நடிகரோ தன்னால் தான் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது என நினைத்துக்கொண்டு பேட்டி கேட்கும் யூடியூப் சேனல்களிடமெல்லாம் லட்சக் கணக்கில் பில்லு போடுகிறாராம். இது வழக்கமான ஒன்றுதான். ஆனால் பட வாய்ப்பு அதிகமாக கிடைத்து வருவதால் தற்போது ஏகப்பட்ட மேனேஜரை போட்டு பெரிய நடிகர்கள் ரேஞ்சுக்கு பந்தா செய்கிறாராம். அதுமட்டுமில்லாமல் அவருடைய ஆரம்ப காலத்தில் அவருக்கு உதவி செய்த சிலர் போன் செய்தாலும் தற்போது போனை எடுப்பதில்லையாம்.

source: maalaimalar

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top