Connect with us
Cinemapettai

Cinemapettai

trisha-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திரிஷாவுக்கு விஜய்யை பிடிக்காதாம்.. ஆனால் அவரது பங்காளியை ரொம்ப பிடிக்குமாம்

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் முன்னணி நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் திரிஷா.

தற்போது பெரிய அளவில் மார்க்கெட் இல்லை என்றாலும் கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.

கமர்சியல் படங்களை ஓரம் கட்டிவிட்டு தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாநாயகி வேடத்தில் நடித்து வருகிறார்.

இது ஒருபுறமிருக்க சமீபத்தில் ஒரு பேட்டியில் தளபதி விஜய்யை பிடிக்காது என்று அவர் கூறியுள்ளது பலருக்கும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

திரிஷாவின் தமிழ் சினிமா கேரியரில் தளபதி விஜய்யுடன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த பிறகுதான் பிக்கப் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கில்லி படத்தை சொல்லலாம். ஆனால் விஜயை விட அவருக்கு தல அஜித்தை தான் ரொம்ப பிடிக்குமாம்.

இதனை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு காரணம் விஜய் உடன் சேர்த்து திரிஷா கிசுகிசுக்கப்பட்டது தான் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

நிஜத்தில் நண்பர்களாக இருந்தாலும் சினிமாவை பொருத்தவரை பங்காளிகளாக எதிரும் புதிருமாக இருப்பவர்கள் விஜய், அஜித் என்பது மறுக்க முடியாத ஒன்று.

trisha-2

trisha-2

Continue Reading
To Top