Connect with us

Cinemapettai

மொத்தமாக சன் பிக்சர்ஸுக்கு கும்பிடு போட்டாரா விஜய்? கைமாறும் தளபதி65

vijay-sunpictures

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மொத்தமாக சன் பிக்சர்ஸுக்கு கும்பிடு போட்டாரா விஜய்? கைமாறும் தளபதி65

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க இருந்த தளபதி65 படத்தைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

முன்னதாக தளபதி65 படத்தை முருகதாஸ் இயக்க இருந்த நிலையில் திடீரென முருகதாஸ் கதை பிடிக்கவில்லை என விஜய் கூறியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து தளபதி65 படத்திற்கான புதிய இயக்குனர்களை தேடும் பணியில் இறங்கியுள்ளார் தளபதி விஜய்.

அதே சமயத்தில் தளபதி65 படத்திற்காகவும் பேசிய சம்பளத்திலிருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் குறைத்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீது அதிருப்தியில் இருந்த விஜய் தற்போது தளபதி65 படத்தை வேறு ஒரு தயாரிப்பாளருக்கு கொடுக்க உள்ளாராம்.

மேலும் விஜய் கேட்ட சம்பளத்தைக் கொடுக்க அந்த தயாரிப்பாளர் ரெடியாக இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளாராம் தளபதி விஜய்.

இயக்குனரை மாற்றியதை போலவே தயாரிப்பாளரையும் மாற்றி விட்டார் என்கிற செய்திதான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் ஹாட் டாபிக்காக உள்ளது.

ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தளபதி65 படம் தொடங்கும் போது தான் தெரியும் என்கிறார்கள்.

vijay-cinemapettai

vijay-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top