புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

வெண்ணிலா போட்டோவை டார்டராக கிழித்த விஜய்.. உச்சகட்ட சந்தோஷத்தில் காவிரி, சூழ்ச்சி பண்ண போகும் ராகினி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரியின் பிறந்தநாளுக்கு விஜய் தொடர்ந்து சர்ப்ரைஸ் கொடுத்து சந்தோசப்படுத்தி வருகிறார். அந்த வகையில் எதிர்பார்க்காத கிப்ட்டுகளை கொடுத்துட்டு வந்த விஜய், கடைசியில் காவிரி கூட்டிட்டு குடும்பத்தை சந்திக்க வைக்கிறார். அப்பொழுது குமரன், கங்கா மற்றும் காவிரி அம்மா அனைவரும் காவிரிக்கு வாழ்த்துக்களை சொல்லி வெடி போட்டு கொண்டாடி காவேரி எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்து விட்டார்கள்.

இந்த சந்தோஷத்துடன் வீட்டிற்கு போன காவேரி, விஜய் தலையில் பூ வைத்ததை நெனச்சு பார்த்து சந்தோஷப்பட்டு கொள்கிறார். அப்போது அங்கு வந்த விஜய் இன்னைக்கு நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் என்று ஓப்பன் ஆகவே காவிரியிடம் சொல்லி காதலை வெளிப்படுத்தும் விதமாக கொஞ்சி கொஞ்சி பேசுகிறார். உடனே காவிரி உங்களுக்கு யார் ரொம்ப பிடிக்கும் என்று கேட்கிறார்.

அதற்கு விஜய் நீதான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்கிறார். உடனே காவேரி என்னை பிடிக்குமா அல்லது வெண்ணிலாவை பிடிக்குமா என்று வெண்ணிலா பற்றி கேட்க ஆரம்பிக்கிறார். இதற்கு பதில் கூறிய விஜய் எப்பொழுதுமே முதல் காதல் தான் பெஸ்ட் என்று சொல்கிறார். இதை கேட்டு பொறாமைப்பட்ட காவேரி, அந்த வெண்ணிலாவை நான் பார்க்கணும் போல தோன்றுகிறது.

நீங்க தான் வெண்ணிலா போட்டோவை வைத்திருக்கிறீர்கள் தானே, என்னிடம் வந்து காட்டுங்களை ஆசையாக இருக்கிறது என்று கேட்கிறார். உடனே விஜய், போட்டோவை எடுத்துட்டு வந்து காவிரியிடம் கொடுக்கிறார். ஆனால் அதில் வெண்ணிலா முகம் தெரியாத அளவிற்கு கிறுக்கி வைத்திருக்கிறது. அப்போது காவிரி எனக்கு என்னமோ வெண்ணிலா பக்கத்திலேயே இருப்பது போலவும் எனக்கு நன்றாக தெரிந்த நபராகவும் தெரிகிறது என்று சொல்கிறார்.

உடனே விஜய், போதும் நீ எனக்கு அந்த போட்டோவை கொடு என்று சொல்லி வாங்கி விடுகிறார். காவேரி, விஜய் மீது இருக்கும் பொறாமையால் இந்தாங்க போட்டோவை பத்திரமா வச்சு பீரோவில் வைத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி போய் விடுகிறார். பின்பு விஜய், அந்த போட்டோவை பார்த்து இனிமேல் எதற்கு இந்த போட்டோ என்று டார் டாராக கிழித்து விடுகிறார்.

அடுத்ததாக மறுநாள் காவேரி புடவை கட்டிட்டு கோவிலுக்கு போகும் பொழுது விஜய் வீடு முழுவதும் அலங்காரம் பண்ணி பிறந்தநாள் பரிசாக வீடு கிப்ட்டா கொடுப்பதற்கு தயாராகி விட்டார். இது தெரியாத காவிரி அலங்காரத்தை பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டு விஜய் இடம் நன்றி சொல்கிறார். அங்கே இருந்த தாதா மற்றும் பாட்டி காவிரிக்கு பிறந்தநாள் சொல்லி இருவரையும் கோவிலுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்த ராகினி, எவ்வளவு தூரம் சந்தோஷப்பட முடியுமா பட்டுக்கோ, இதற்கெல்லாம் ஆப்பு வைக்கும் விதமாக நான் வெண்ணிலவை கூட்டிட்டு வந்து விடுகிறேன். அப்பொழுது உன்னுடைய மொத்த சந்தோஷமும் காணாமல் போய்விடும் என்று சூழ்ச்சி பண்ண ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் காவிரியின் பிறந்தநாள் முடியும் தருவாயில் வெண்ணிலா வந்து அதிர்ச்சியை கொடுக்க போகிறார்.

- Advertisement -

Trending News