புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அண்ணாமலை விட்டதை கையில் எடுக்கும் விஜய்.. ஆதாரத்துடன் தொடங்க போகும் பிரச்சாரம்

Thalapathy Vijay: நடிகர் விஜயின் அரசியல் வியூகம் நாளுக்கு நாள் நம்மை வியக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. ஆரம்ப காலகட்டங்களில் கண்ணாடி அணிந்து கொண்டு கன்னத்தில் கை வைத்துக் கொண்டு எல்லோரும் பேசுவதற்கு புன்முறுவல் மட்டும் செய்யும் விஜய் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் பேசியதே அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது.

அண்ணாமலை விட்டதை கையில் எடுக்கும் விஜய்

அதைத் தாண்டி அரசியலுக்கு வர போகிறேன் என்ற அறிவிப்பை கொடுத்ததோடு முதல் மாநாட்டில் விஜய் பேசியதெல்லாம் மெய்சிலிர்க்கும் தருணம் தான். கட்சி ஆரம்பிச்சாச்சு, மாநாடும் நடந்து முடிஞ்சாச்சு அடுத்த விஜயின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது எல்லோருடைய கேள்வியாகவும் இருந்தது.

நிர்வாகிகளை அழைத்து கட்சிக்கு தேவையான தீர்மானங்களையும் விஜய் சமீபத்தில் நிறைவேற்றி இருந்தால். அதைத் தொடர்ந்து தற்போது விஜயின் அடுத்த கட்ட நகர்வு குறித்து செய்திகள் வெளியாகி இருக்கிறது.

அதாவது ஆளும் கட்சி மற்றும் இதுவரை தமிழகத்தை ஆண்ட கட்சிகளின் ஊழல் குறித்து ஆதாரத்துடன் அறிக்கை தயார் செய்ய தமிழக வெற்றிக்கழகம் முடிவு செய்து இருக்கிறதாம். எந்த ஒரு விதத்திலும் இதற்கு பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதால் வழக்கறிஞர்களின் உதவியுடன் இந்த அறிக்கை ரெடியாகி கொண்டிருக்கிறதாம்.

சும்மா ஏக வசனம் பேசி மற்ற கட்சிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை விட ஆதாரத்துடன் அறிக்கை தயார் செய்து ஊழலை மையமாகக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறாராம் நடிகர் விஜய். பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை இதற்கு முன்பாக திமுக கட்சியின் ஊழல் அறிக்கையை தயார் செய்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News