விஜய் நடித்த படங்களில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி, கத்தி ஆகியவை மிக முக்கியமான படங்கள். ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த படங்கள் ரூ.100 கோடி வசூல் சாதனை பட்டியலிலும் இடம்பிடித்தன. அதனால் முருகதாசுடன் மீண்டும் விஜய் இணைய வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பமாக இருந்து வருகிறது. அதை தெறிக்கு பிறகு விஜய் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பரதன் இயக்கிய பைரவாவில் கமிட்டானார் விஜய். அதேபோல், மகேஷ்பாபு நடிக்கும் பட வேலைகளில் இறங்கினார் முருகதாஸ்.

இருப்பினும், தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் 61-வது படத்திற்கு பிறகு மீண்டும் விஜய், ஏ.ஆர்.முருகதாசுடன் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதுவும் துப்பாக்கி-2 படத்தில் அவர் நடிக்கிறாராம். பில்லா-2வில் அஜீத், சிங்கம்-3யில் சூர்யா, சாமி-2வில் விக்ரம் என பல நடிகர்கள் இரண்டாம் பாக கதைகளில் நடிப்பதைத் தொடர்ந்து விஜய்க்கும் அந்த ஆசை ஏற்பட்டுள்ளதாம். இதை அவர் முருகதாசிடம் சொன்னபோது, அப்படியென்றால், துப்பாக்கி-2 எடுத்து விடுவோம் என்று கூறியிருக்கிறாராம்.